Published:Updated:

`கொடூரக் கொலை; வீசப்பட்ட இளம்பெண்ணின் சடலம்?!’ -நகைகளை வைத்து துப்புதுலக்கும் தெலங்கானா போலீஸ்

Representation image
Representation image

இளம்பெண்ணை வேறு பகுதியில் படுகொலை செய்து உடலை தூக்கிவந்து பாலத்தின் கீழே வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு இருந்தது.

தெலங்கானா மாநிலம் தங்கடிபள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மார்ச் 17-ம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் நிர்வாணமான நிலையில் சடலமாக இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதைக்கண்ட கிராம மக்கள் உடனடியாக போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பாலத்தின் கீழே இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையில் இறங்கினர். அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக அந்தப்பெண்ணின் முகத்தைச் சிதைத்துள்ளனர். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பிற காவல்நிலையங்களை போலீஸார் அலர்ட் செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் யாராவது மாயமாகியுள்ளனர் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர்.

Representation image
Representation image

இளம்பெண்ணின் சடலம் நிர்வாணமாக இருந்ததால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

`பச்சை நிற உடை; சிதைக்கப்பட்ட முகம்!’ - தெலங்கானா இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

இளம்பெண்ணை வேறு பகுதியில் படுகொலை செய்து உடலை தூக்கிவந்து பாலத்தின் கீழே வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு இருந்தது. இதையடுத்து அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால், பெரிய அளவில் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுற்றுவட்டாரப் பகுதியில் விசாரித்ததில் இளம்பெண் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Representation image
Representation image

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப்பெண் 30 வயதுக்குட்பட்டவர் என்பது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 5 மணிக்குள் இந்தக்கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கொலையான பெண் யாரென இதுவரை அடையாளம் காணப்படாததால் கொலைக்கான காரணங்கள் தெரியாமல் தெலங்கானா போலீஸார் தடுமாறி வருகின்றனர். அந்தப்பெண்ணின் உடலில் நகைகள் இருந்ததால் நகைக்காவும் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் போலீஸார்.

அவரது உடலில் இருந்து வளையல், தோடு, செயின் உள்ளிட்ட தங்க நகைகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த நகைகள் தென்னிந்திய பாணியில் இல்லை. இவை ராஜஸ்தான் அல்லது மகாராஷ்ட்ரா மாநிலப் பெண்கள் அணியும் பாணியில் இருப்பதால் கொலையானது வடமாநிலப் பெண்ணாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு