Published:Updated:

`எங்க மேலேயே புகார் கொடுப்பியா?’ - கணவர் குடும்பத்தால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

murder
murder

உத்தரபிரதேச மாநிலத்தில் முத்தலாக் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு சில கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும் இதைச் சட்டவிரோதம் என்றும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் இந்தப் பிரிவின்கீழ் வழக்குகளும் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Parliament
Parliament

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவாஸ்டி மாவட்டத்தில் சயீதா(22) என்ற இளம் பெண்ணுக்கு அவரது கணவர் தொலைபேசி மூலம் முத்தலாக் கூறியிருக்கிறார். கணவர் நஃபீஸ், மும்பையில் பணியாற்றி வருகிறார், கணவன் மனைவிக்கு நடுவே அடிக்கடி சண்டை ஏற்படுவதும் குடும்பத்தினர் சமாதானம் செய்வதும் தொடர்கதையாகி இருந்திருக்கிறது.

இதுதொடர்பாக சயீதாயின் தந்தை என்.டி.டி.வி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ``நஃபீஸ் எனது மகளை தொடர்ச்சியாகத் தாக்கி வந்தார். ஆனால் நானும் இந்த விவகாரத்தில் தலையிட்டு பெரிதுபடுத்தியது கிடையாது. ஆனால் அதன்பிறகு அவர் முத்தலாக் சொல்லிவிட்டார்” என்கிறார்.

representational image
representational image

கடந்த 6 -ம் தேதி மும்பையிலிருந்து தொலைபேசி மூலம் நஃபீஸ் முத்தலாக் சொல்லியுள்ளார். இதனால் மனமுடைந்த சயீதா, இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார். எனினும் அவரது கணவர் மும்பையிலிருந்து திரும்பி வரும்வரை பொறுமை காக்குமாறு போலீஸார் அவரைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நஃபீஸ் வந்ததும், இருவரிடம் பேசிய போலீஸார், இருவரையும் சமாதானப்படுத்தியதோடு, சேர்ந்து வாழுங்கள் என அறிவுரை சொல்லி அனுப்பியுள்ளனர். வீட்டுக்கு வந்ததும் நஃபீஸ் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரைத் தாக்கியுள்ளனர். பின்னர் சயீதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளனர்.

Fire
Fire

இது தொடர்பாக சயீதாவின் தந்தை அளித்த புகாரின் பெயரில் நஃபீஸ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். 8 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. `அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்' எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. இறந்த பெண்ணின் உடல், உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். உள்ளூர் காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசியது தொடர்பாக சில பத்திரிகைச் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டோம். அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும்” என்றார். மேலும் சயீதாவின் இளைய மகள் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? A டூ Z தகவல்கள்! #DoubtOfCommonMan

முத்தலாக் தொடர்பாக புகார் அளித்ததற்காகப் பெண் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு