Published:Updated:

`நோ... நோ!' என கதறிய சுற்றுலாப் பயணிகள்- தொட்டபெட்டா உச்சியிலிருந்து குதித்து உயிரை மாய்த்த பெண்!

உச்சியிலிருந்து குதித்து உயிரை மாய்த்த பெண்

பாறைகள் நிறைந்த ஆபத்தான சரிவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் தாண்டியிருக்கிறார். பின்னர், சிகர உச்சியிலிருந்து திடீரென கீழே குதிக்க தயாராகியிருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா சிகரத்திலிருந்து பள்ளத்தாக்குகளை சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். பாறைகள் நிறைந்த ஆபத்தான சரிவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் தாண்டியிருக்கிறார். பின்னர், சிகர உச்சியிலிருந்து திடீரென கீழே குதிக்க தயாராகியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக சுற்றுலாப் பயணிகள், `நோ... நோ..!' என கதறியிருக்கிறார்கள். இதை சற்றும் சட்டை செய்யாத அந்தப் பெண், சிகரத்தின் உச்சியிலிருந்து கீழே குதித்திருக்கிறார். பதறவைக்கும் இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக விரைந்த மீட்புக்குழுவினர் அந்தப் பெண்ணை சடலமாக மீட்டனர்.

லீலாவதி
லீலாவதி

இந்த துயரம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``கோவை மாவட்டம், தடாகம் கணுவாய் ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. 62 வயதான இவர் மனைவி லீலாவதி, ஆட்டோ எடுத்துக் கொண்டு தொட்டபெட்டா வந்திருக்கிறார். காட்சி கோபுரத்துக்கு கீழ் பகுதிக்குச் சென்று, கையில் வைத்திருந்த பையை பாறைமீது வைத்துவிட்டு பாறையிலிருந்து கிழே குதித்திருக்கிறார். அவரது பையில் 16,500 ரூபாய் பணமும் ஆதார் அட்டையும் இருந்தது. கயிற்றைக் கட்டி கீழே இறங்கி உடலை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். சுமார் 500 அடி பள்ளத்தில் லீலாவதியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.