Published:Updated:

விருப்பமில்லாத திருமணம்; விபரீத முடிவை எடுத்த இன்ஜினீயர் மனைவி! - 38வது நாளில் சோகம்

சென்னையில் விருப்பம் இல்லாமல் நடந்த திருமணத்தால் 38 வது நாளில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் இன்ஜினீயர் மனைவி.

இன்ஜினீயர் மனைவி தற்கொலை
இன்ஜினீயர் மனைவி தற்கொலை

சேலத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சென்னை சிறுசேரியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி மீனா. இவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பர் 3-ம் தேதி திருமணம் நடந்தது. மீனாவின் சொந்த ஊர் ஈரோடு.

representational image
representational image
``என்னால பிரச்னை வரக்கூடாதுன்னு தொடரிலிருந்து விலகிட்டேன்!’’ - `திருமணம்’ புகழ் ப்ரீத்தி ஷர்மா

திருமணத்துக்குப் பிறகு புதுமண தம்பதி, சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 10 நாள்களுக்கு முன் குடிவந்தனர். ராமலிங்கம், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் மீனா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து ராமலிங்கம் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, ராமலிங்கம், மீனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மீனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

`நீங்க சந்தோஷமாக இருக்கணும்; நான் உயிரிழக்கிறேன்'- திருச்சியிலும் மாணவிகள் தற்கொலை?

பள்ளிக்கரணை போலீஸார் நடத்திய விசாரணையில், மீனாவுக்கும் ராமலிங்கத்துக்கும் இருவீட்டினர் பேசி திருமணம் நடத்திவைத்துள்ளனர். இவர்களின் திருமணம் சேலம் அந்தியூரில் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு மனைவியை அழைத்துக் கொண்டு ராமலிங்கம் சென்னை வந்துள்ளார். அப்போது இருவர்வீட்டிலுமிருந்தும் உறவினர்கள் வந்துள்ளனர்.

உறவினர்கள் ஊர் திரும்பிய பிறகு மீனாவும் ராமலிங்கமும் வீட்டில் இருந்துள்ளனர். ராமலிங்கம் வேலைக்குச் சென்றபோது தனியாக இருந்த மீனா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தத் திருமணத்தில் மீனாவுக்கு விருப்பம் இல்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 10 நாள்களுக்கு முன் குடிவந்தனர். ராமலிங்கம், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் உள்ள மின்விசிறியில் புடவையால் மீனா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

மீனா, தற்கொலை செய்வதற்கு முன் யார், யாரிடம் போனில் பேசினார் என்ற விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். அதோடு மீனாவின் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்துவருகிறது. திருமணம் நடந்து 38 நாள்களுக்குள் மீனா, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.