Published:Updated:

விருதுநகர்: கணவருடன் தினமும் சண்டை - விரக்தியில் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்!

விருதுநகர்
News
விருதுநகர்

விருதுநகரில் கணவரின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில், இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் அருகிலிருக்கும் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், வேன் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த லட்சுமி பிரியா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள். சிவக்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளுடன் உயிரிழந்த லட்சுமி பிரியா
குழந்தைகளுடன் உயிரிழந்த லட்சுமி பிரியா

அதனாலும், குடிப்பழக்கத்தாலும் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்திருக்கிறது. இருவருக்கும் இடையே ஒவ்வொரு முறை சண்டை ஏற்படும்போதும், அக்கம் பக்கத்தினர் தலையிட்டு சமாதானம் செய்துவைத்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்றும் மது அருந்திவிட்டு லட்சுமி பிரியாவுடன் சண்டை போட்டிருக்கிறார் சிவக்குமார். அதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்ற லட்சுமி பிரியா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதனால், பயந்துபோன சிவக்குமார், அருகிலுள்ள வீடுகள், உறவினர்களின் வீடுகளில் தேடியிருக்கிறார். ஆனால், அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தம்மநாயக்கன்பட்டி ஊருக்கு மேற்குப் பகுதியிலிருக்கும் காட்டுப்பகுதியின் கிணற்றுக்கு அருகில் இரண்டு காலணிகள் கிடந்திருக்கின்றன. இதைப் பார்த்த அப்பகுதியினர், கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தபோது கிணற்றுக்குள் தண்ணீர் கலங்கிய நிலையில், சேலையில் மிதப்பதைப் பார்த்திருக்கின்றனர்.

வச்சக்காரப்பட்டி காவல் நிலையம்
வச்சக்காரப்பட்டி காவல் நிலையம்

இதனால், சந்தேகம் அடைந்தவர்கள் வச்சக்காரப்பட்டி போலீஸாருக்குத் தகவல் கூறினர். விருதுநகர் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் குதித்துத் தேடியபோது, லட்சுமி பிரியா, இரண்டு குழந்தைகளையும் தனது சேலையுடன் இறுக்கமாகக் கட்டியதுடன், ஒரு கல்லையும் சேர்த்துக்கட்டி, குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூவரின் உடல்களையும் மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக சிவகுமார் வீட்டுக்கு அருகில் குடியிருப்பவர்களிடம் விசாரித்தோம். ``சிவக்குமார், தினமும் குடிச்சுட்டு வந்து ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சண்டை போடுவான். அதிகமா குடிச்சுட்டு வந்தா, அந்தப் பொண்ணை அடிப்பான். அவன் வீட்டுக்கு வந்தாலே ரெண்டு பிள்ளைகளும் பயப்படும். எப்போ சண்டை வந்தாலும் விலக்கிவிட்டு சமாதானப்படுத்துவோம்.

வச்சக்காரப்பட்டி காவல் நிலையம்
வச்சக்காரப்பட்டி காவல் நிலையம்

நேத்தும் அதே மாதிரிதான் சத்தம் போட்டு விலக்கிவிட்டோம். ஆனா, குழந்தைகளைத் தூக்கிக்கிட்டு வீட்டைவிட்டு அழுதுக்கிட்டே போச்சு அந்தப் பொண்ணு. கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடும்னு நினைச்சோம். ஆனா, ரொம்ப நேரம் ஆகியும் வரலை. காலையில பார்த்தா கிணத்துல குழந்தைகளோட கல்லைக் கட்டிக்கிட்டு குதிச்சு இறந்துபோச்சு. பாழாப்போன குடியால மூணு உசுரு போயிருச்சு" என்றார்கள்.