Published:Updated:

மும்பை: எலி மருந்து கலந்த தக்காளி; தவறுதலாக நூடுல்ஸில் கலந்து சாப்பிட்ட பெண் பரிதாப பலி!

மரணம் ( சித்திரிப்புப் படம் )

மும்பையில் தவறுதலாக எலி மருந்து கலந்த தக்காளியை நூடுல்ஸில் கலந்து சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை: எலி மருந்து கலந்த தக்காளி; தவறுதலாக நூடுல்ஸில் கலந்து சாப்பிட்ட பெண் பரிதாப பலி!

மும்பையில் தவறுதலாக எலி மருந்து கலந்த தக்காளியை நூடுல்ஸில் கலந்து சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

மும்பை மலாடு பகுதியிலுள்ள பாசில்வாடியில் தன்னுடைய கணவன், மைத்துனருடன் வசித்துவசித்தவர் ரேகா நிஷாத் (30). அவர்களின் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் எலிகளுக்கு வீட்டில் மருந்து வைத்தார். தக்காளியுடன் எலி மருந்தைக் கலந்து வீட்டில்வைத்தார். இந்த நிலையில் அது குறித்து அறியாமல், அதே தக்காளியை தவறுதலாக வீட்டில் சமையலுக்கு ரேகா பயன்படுத்தியிருக்கிறார். கடையிலிருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து சமைத்தபோது அதில் தக்காளியை வெட்டிப்போட்டிருக்கிறார்.

நூடுல்ஸைச் சாப்பிட்ட ரேகாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவர் சதாப்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீஸாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் ரேகாவிடம் வாக்குமூலம் வாங்கினர்.

 நூடுல்ஸ்
நூடுல்ஸ்

அவர் நூடுல்ஸ் சாப்பிட்ட விவரத்தைத் தெரிவித்தார். இதற்கிடையே கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த ரேகா சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மரணத்தில் எந்தவிதச் சந்தேகமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். நூடுல்ஸ் சாப்பிட ஆசைப்பட்டு தனது உயிரை ரேகா இழந்திருக்கிறார். அவர் நூடுல்ஸ் தயாரிக்கும்போது போனில் பேசிக்கொண்டே சமைத்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். இது குறித்து ரேகாவின் கணவர், மைத்துனரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ரேகாவின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருப்பதால் போலீஸார் இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!