Published:Updated:

`நான் செத்தால்தான் நீ நம்புவியா ஸ்ருதி?!' -சென்னை தொழிலதிபரின் வீடியோவால் பதறும் இளம்பெண்

ஸ்ருதி
ஸ்ருதி

கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, `நான் செத்துவிடவா' என்று சென்னை தொழிலதிபரின் வீடியோவுக்கு வெளிநாட்டில் விண்வெளி தொடர்பாக படித்துவரும் ஸ்ருதியிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

`ஆடி போனா ஆவணி' என்ற படத்தின் நடிகை ஸ்ருதி, திருமண ஆசையைக் காட்டி ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கோவை காவல்துறையில் இளைஞர்கள் சிலர் புகார் கொடுத்தனர். அந்த வழக்கில் ஸ்ருதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ஸ்ருதியின் அம்மா சித்ரா சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ஸ்ருதி
ஸ்ருதி

அந்தப் புகாரில், `கடந்த 2016-17-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் நடிகை ஸ்ருதி படித்துக்கொண்டிருந்தார். அப்போது, சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜசேகரனின் மகன் அமுதன் வெங்கடேசன், ஸ்ருதியை ஒருதலையாகக் காதலித்தார். ஸ்ருதியை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அமுதன் வெங்கடேசன் தொந்தரவு செய்து வந்தார். இதுதொடர்பாக நான்குமுறை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளேன்.

மேலும், ஸ்ருதியை தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக்கூறி அமுதன் 2 வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளார். தற்போது ஸ்ருதி வெளிநாட்டிலிருந்து சென்னை வரவுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 5-தேதி ஸ்ருதியை திருமணம் செய்து வைக்காவிட்டால் என் மீது (சித்ரா) ஆசிட் வீசுவதாக ராஜசேகரன் மற்றும் அமுதன் வெங்கடேசன் மிரட்டினர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ருதி
ஸ்ருதி
`என் புகைப்படம், வீடியோவை அகற்றுங்கள்; திருமணம்  தடைபடுது!' - கோவை போலீஸில் புகார் கொடுத்த ஸ்ருதி

புகாரின்பேரில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சோபியா வழக்கு பதிந்தார். இதனைத் தொடர்ந்து அமுதன் வெங்கடேசன், அவரின் தந்தை ராஜசேகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அமுதன்
அமுதன்

சித்ரா கூறுகையில், ``என்னுடைய மகள் ஸ்ருதி, நாசாவால் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டு இன்டன்ஷிப் செல்லவுள்ளார். அவள், யூனிவர்சிட்டி டாப் ரேங்க் எடுத்தவர். அவளுடைய நோக்கம் எல்லாம் படிக்க வேண்டும் என்பதுதான். அப்துல் கலாம் போல விஞ்ஞானியாக வரணும் என்று ஆசைப்பட்டாள். அதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஆனால், அவளின் வாழ்க்கையை சிலர் நாசமாக்கிவிட்டார்கள்.

`ஆடி போனா ஆவணி' என்ற படத்தில் நடிக்க ஸ்ருதிக்கு அழைப்பு வருவதற்கு முன் முன்னணி ஹீரோ ஒருவருடன் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. அந்தச் சமயத்தில்தான் `ஆடி போனா ஆவணி' என்ற படத்தில் நடிக்க அவளுக்கு அழைப்பு வந்தது. ஆனால், அவள் அந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

ஸ்ருதி மீது புகார் கொடுத்தவர்கள் எல்லாம் அவளை நடிகை என்று பிரபலப்படுத்தி வருகின்றனர். தற்போது அவள் வெளிநாட்டில் விண்வெளி தொடர்பான படிப்பை படித்துவருகிறார்.

சித்ரா
சித்ரா

கடந்த 10 ஆண்டுகளாக சொல்ல முடியாத பிரச்னைகளை நாங்கள் சந்தித்துவருகிறோம். ஸ்ருதி மீது புகார் கொடுத்தவர்கள் எங்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்துவருகின்றனர். அதுதொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. விரைவில் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன்" என்றார்.

ஸ்ருதியை கடந்த சில ஆண்டுகளாக காதலிப்பதாகக் கூறும் அமுதன், வெளியிட்டுள்ள வீடியோவில் ``நான் வாழ்வது உனக்காகத்தான், நான் செத்துவிடவா... இது கூர்மையான கத்தி, நான் செத்தால்தான் நீ நம்புவியா" என்று பேசுகிறார். அடுத்த வீடியோவில் செருப்பால் தன்னைத் தானே அடித்துக்கொள்கிறார் அமுதன்.

அடுத்த கட்டுரைக்கு