Published:Updated:

`ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்!’ -மின்வாரிய அதிகாரியால் பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடுமை

அணைக்கட்டு காவல் நிலையம்
அணைக்கட்டு காவல் நிலையம்

அணைக்கட்டு மின் வாரிய அலுவலகத்தில், ராணுவ வீரரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளநிலை மின்பொறியாளர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

வேலூரை அடுத்த ஊசூர் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் மனைவி, அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ``நான் ஐ.டி.ஐ முடித்துவிட்டு அணைக்கட்டு மின்வாரிய அலுவலகத்தில் 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, தொழில் பழகுநர் பயிற்சியாளராக பணிக்குச் சேர்ந்தேன்.

அதே அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றிவரும் சந்திரசேகர் எனக்கு தொடர்ந்து பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுக்கிறார். தனியாக அழைத்து அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகப் பேசுகிறார். அவரின் ஆசைக்கு இணங்காததால் என்னுடைய நடத்தை குறித்து மற்ற அலுவலர்களிடம் தவறாகக் கூறுகிறார்.

பாலியல் கொடுமை
பாலியல் கொடுமை
மாதிரி படம்

`என் விருப்பத்துக்கு இணங்கினால் மட்டுமே பயிற்சி பெற்ற சான்றிதழைக் கொடுப்பேன்' என்கிறார். `அலுவலகத்தில் கூச்சமாக இருந்தால் லாட்ஜுக்குப் போகலாம்.. என்னைப் பற்றி வெளியில் சொன்னால் உன்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன்’ என்று மிரட்டுகிறார். இளநிலைப் பொறியாளர் சந்திரசேகரின் பேச்சு குறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், `உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிடுவேன். பணியின்போது மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக வழக்கை மாற்றவும் எனக்குத் தெரியும் என்று கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, அவரைக் கைது செய்ய வேண்டும்' என்று புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

`டூ வீலரில் பின்தொடர்ந்து  இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!’ - ராமநாதபுரத்தில் போலீஸில் சிக்கிய இருவர்

காவல்நிலையத்துக்குப் புகார் சென்றதை அறிந்த சந்திரசேகர், தனக்கு வேண்டப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்த பிரமுகர்களை வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் வேலையில், புகாரைத் திரும்பப் பெறுமாறு அந்தப் பெண்ணை அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

கட்டப்பஞ்சாயத்து கும்பல்
கட்டப்பஞ்சாயத்து கும்பல்

இதுபற்றி, இளநிலைப் பொறியாளர் சந்திரசேகரிடம் பேசினோம். ``என் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அந்தப் பெண் தினமும் அலுவலகத்துக்குத் தாமதமாக வருவார். அதுகுறித்து கேள்வி கேட்டதால் என்னைப் பிரச்னையில் சிக்க வைக்கப் பார்க்கிறார். எனக்கு ஆதரவாகப் பேசிய கட்சி பிரமுகர்கள் என்னுடைய உறவினர்கள்தான். அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யவில்லை’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு