Published:Updated:

``அவரை நம்பி இதுவரை 14 முறை கருக்கலைப்பு செய்துவிட்டேன்" - தற்கொலை செய்துகொண்ட பெண் உருக்கம்

தற்கொலை

அந்தப் பெண் விவாகரத்தானவர் என்பதும், பீகாரிலிருந்து இங்கு வந்து பணிபுரிந்து தனியாகத் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

``அவரை நம்பி இதுவரை 14 முறை கருக்கலைப்பு செய்துவிட்டேன்" - தற்கொலை செய்துகொண்ட பெண் உருக்கம்

அந்தப் பெண் விவாகரத்தானவர் என்பதும், பீகாரிலிருந்து இங்கு வந்து பணிபுரிந்து தனியாகத் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

Published:Updated:
தற்கொலை

பீகாரின் முசாபர்பூரைச் சேர்ந்த 33 வயது பெண் டெல்லி ஜெய்த்பூரில் தனியாக வசித்துவந்தார். இந்த நிலையில், அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உடலை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தது. அதைத் தொடர்ந்து, இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்தபோது அந்தப் பெண் விவாகரத்தானவர் என்பதும், பீகாரிலிருந்து இங்கு வந்து பணிபுரிந்து தனியாகத் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

காவல்துறை
காவல்துறை

அதைத் தொடர்ந்து அவரின் வீட்டில் காவல்துறை நடத்திய சோதனையில் தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ``நொய்டாவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த நபருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து என்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என அவர் அளித்த உறுதியால், அவருடன் நெருங்கிப் பழகியதால் பலமுறை கருவுற்றேன். இதுவரை 14 முறை அவரை நம்பி, அவரின் வற்புறுத்துதலால் கருக்கலைப்பு செய்திருக்கிறேன். இப்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். அதனால் என் வாழ்வை முடித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் செல்போனை காவல்துறை ஆய்வு செய்துவருகிறது. மேலும், தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது வழக்குப்பதியப்பட்டிருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!