Published:Updated:

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - மின் பராமரிப்பு ஊழியர்கள் ஓய்வறையில் கொடூரம்

கூட்டு பாலியல் வன்கொடுமை

டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு பெண் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - மின் பராமரிப்பு ஊழியர்கள் ஓய்வறையில் கொடூரம்

டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு பெண் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
கூட்டு பாலியல் வன்கொடுமை

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர், தன் கணவனை விவாகரத்து செய்வதற்காக வழக்கு நடத்தி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு உதவுவதாக குற்றம்சாட்டப்பட்டவர் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்பு அவர் நல்லவரைப் போலப் பேசி பழகிவந்துள்ளார். இந்த நிலையில், `என் மகளுக்குப் பிறந்த நாள், அதற்கு நீ கண்டிப்பாக வரவேண்டும்' என அந்தப்பெண்ணிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஹரியானாவிலிருந்து டெல்லி வந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பிறந்த நாள் விழா கொண்டாடியிருக்கிறார்.

கைது
கைது

விழா முடிந்து திரும்ப ஹரியானா புறப்பட்ட அந்த பெண்ணை, மெட்ரோ மூலம் சுமார் 10:30 மணியளவில் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மின் பராமரிப்பு ஊழியர்கள் ஓய்வு அறையில் காத்திருக்கக் கூறி, வெளியே சென்றுவிட்டார். அங்கு நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் அந்த பெண்ணும் காத்திருந்த போது, திடீரென மூன்று நண்பர்களுடன் அறைக்குள் நுழைந்த அந்த நபர், அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர்களுக்கு வெளியிலிருந்து இருவர் காவல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின் அங்கிருந்து தப்பித்து ரயில்நிலைய காவலர்களிடம் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். அவர்கள் வந்து பார்த்த போது குற்றவாளிகள் அங்கு இல்லை. அதன் பின் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மின் பராமரிப்பு ஊழியர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!