Published:Updated:

உலகக் கோப்பை கால்பந்து கொண்டாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்! - மணிப்பூரில் அதிர்ச்சி

துப்பாக்கி ( pixabay )

குற்றவாளி கைதுசெய்யப்படும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை இறுதிச்சடங்குக்கு எடுத்துச் செல்ல மாட்டோம் என அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகக் கோப்பை கால்பந்து கொண்டாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்! - மணிப்பூரில் அதிர்ச்சி

குற்றவாளி கைதுசெய்யப்படும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை இறுதிச்சடங்குக்கு எடுத்துச் செல்ல மாட்டோம் என அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published:Updated:
துப்பாக்கி ( pixabay )

கால்பந்து விளையாட்டுக்கு உலகம் முழுக்க அதிக ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற்றுவந்த நிலையில், அர்ஜென்டினா உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் கால்பந்தாட்ட ரசிகர்கள் அதை வெகு விமரிசையாகக் கொண்டாடினர். அது மாதிரியான கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணியளவில் மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்திலுள்ள சிங்ஜமேய் வாங்மா பீகாபதி பகுதியில் நடந்ததாகத் தெரிகிறது. இம்பால் பகுதியில் உலகக் கோப்பை வெற்றியை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் வீதிகளிலும் பட்டாசு வெடித்துக்கொண்டாடியிருக்கின்றனர்.

அதே பகுதியில் வசித்த இபேடோம்பி (50) என்ற பெண் அவரின் குடும்பத்தினரோடு டி.வி-யில் கால்பந்தாட்ட முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது கொண்டாட்டத்தின்போது தவறுதலாகத் துப்பாக்கிக்குண்டு பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொண்டாட்டத்தின்போது மர்மநபர் ஒருவர் தவறுதலாக துப்பாக்கியை அழுத்தியதாகக் கூறப்படுகிறது.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

அதிலிருந்த துப்பாக்கிக்குண்டு இபேடோம்பியின் முதுகில் பாய்ந்திருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். இருப்பினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அவரின் வீட்டை தடவியல் நிபுணர்களின் சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது. இது குறித்து பேசிய மணிப்பூர் காவல் துறையினர், ``உயிரிழந்த பெண்ணின் வீட்டுச் சுவரில் குண்டுகள் பதிந்த தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு குண்டு பெண்ணின் முதுகில் பாய்ந்திருக்கிறது. தடயவியல்துறையினர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டுவருகிறது'' என்றார்.

குற்றவாளி கைதுசெய்யப்படும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை இறுதிச்சடங்குக்கு எடுத்துச் செல்ல மாட்டோம் என அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.