Published:Updated:

முத்தத்தில் மாற்றப்பட்ட போதைப்பொருள்; சிறை விசிட்டில் காதலியின் நூதன முயற்சியால் இறந்த இளைஞர்!

முத்தத்தில் மாற்றப்பட்ட போதைப்பொருள் ( AP/ Charlie Riedel )

காதலர்கள் இருவரும் முத்தமிட்டுக்கொண்டது தெரியவந்தது. அதையடுத்து, ஜோசுவாவின் மரணத்துக்கு அவர் காதலி காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

முத்தத்தில் மாற்றப்பட்ட போதைப்பொருள்; சிறை விசிட்டில் காதலியின் நூதன முயற்சியால் இறந்த இளைஞர்!

காதலர்கள் இருவரும் முத்தமிட்டுக்கொண்டது தெரியவந்தது. அதையடுத்து, ஜோசுவாவின் மரணத்துக்கு அவர் காதலி காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

Published:Updated:
முத்தத்தில் மாற்றப்பட்ட போதைப்பொருள் ( AP/ Charlie Riedel )

அமெரிக்காவின் டென்னஸ்ஸி (Tennessee) பகுதியில் உள்ள சிறையில், ஜோசுவா பிரவுன் என்பவர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 11 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையிலிருந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் திடீரென ஜோசுவா பிரவுன் இறந்துவிட்டார். ஜோசுவா சிறையிலேயே இறந்ததால் சிறை அதிகாரிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டது. ஜோசுவா பிரவுன் இறப்புக்கு என்ன காரணம் என காவல்துறை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது.

சிறைக் கைதிகள் யாரேனும் கொலைசெய்துவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. ஆனால், ஜோசுவா பிரவுன் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. ஜோசுவா பிரவுன் இறப்பதற்கு முன்னர் இறுதியாகப் பார்க்க வந்தவர் அவரின் காதலி ரேச்சல் டொலார்ட்தான். அவர் வந்து சென்ற சில மணி நேரங்களில்தான் ஜோசுவா இறந்தார். ஆனால், அவர் சிறைக்குள்ளே வரும்போது எந்தப் பொருளையும் கொண்டுவரவில்லை. உணவுப்பொருள்கள்கூட சிறையில் அனுமதிக்கப்படாத நிலையில், எப்படி இறந்திருப்பார் என காவல்துறை செய்வதறியாது திகைத்தது.

ரேச்சல் டொலார்ட் - ஜோசுவா பிரவுன்
ரேச்சல் டொலார்ட் - ஜோசுவா பிரவுன்
ட்விட்டர்

அப்போதுதான் காதலர்கள் இருவரும் முத்தமிட்டுக்கொண்டது தெரியவந்தது. அதையடுத்து, ஜோசுவாவின் மரணத்துக்கு அவர் காதலி காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது கிடைத்த தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம்...!

இது தொடர்பாக ஊடகங்களிடம் காவல்துறையினர், ``ஜோசுவாவைச் சந்திக்க வந்த அவர் காதலி ரேச்சல் டொலார்ட் தன் காதலனுக்காக வாயில் போதைப்பொருளைக் கொண்டுவந்திருக்கிறார். அதை ரகசியமாக முத்தத்தின் மூலம் கொடுத்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
போதைப்பொருள்
போதைப்பொருள்
கோப்புப் படம்

இதை எதிர்பார்க்காத ஜோசுவா பிரவுன் முழுவதுமாக உட்செலுத்திக்கொண்டிருக்கிறார். அதன் விளைவாக அவர் இறந்துவிட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைக் கைதிகளைச் சந்திக்க வருபவர்களின் உடலையும் ஸ்கேன்செய்ய புதிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் உயிரிழந்த இளைஞரின் காதலிமீது நாங்கள் கொலை வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.