Published:Updated:

குமரி: `நகைக்காக சிறுவன் கொலை; பீரோவில் சடலம்... கடலில் வீசத் திட்டம்' - நடந்தது என்ன?!

சிறுவன் கொலை

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஜோகன் ரிஷியை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தலையணையை வைத்து, சிறுவனின் முகத்தை அமுக்கி கொலைசெய்திருக்கிறார்.

குமரி: `நகைக்காக சிறுவன் கொலை; பீரோவில் சடலம்... கடலில் வீசத் திட்டம்' - நடந்தது என்ன?!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஜோகன் ரிஷியை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தலையணையை வைத்து, சிறுவனின் முகத்தை அமுக்கி கொலைசெய்திருக்கிறார்.

Published:Updated:
சிறுவன் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குள் அமைந்துள்ளது கடியப்பட்டணம் மீனவ கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜான் ரிச்சர்ட் வெளிநாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். ஜான் ரிச்சர்ட்டின் மனைவி சகாய சில்ஜா(28), மகன் ஜோகன் ரிஷி(4), இரண்டு மாத மகள் ஆகியோர் கடியப்பட்டணத்தில் வசித்துவந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் ஜோகன் ரிஷி வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானான். மகனை காணவில்லை என்றதும், தாய் சகாய சில்ஜா அந்த பகுதியில் தேடிப்பார்த்துவிட்டு மணவாளகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி, பாத்திமா என்ற பெண்ணையும், அவர் கணவர் சரோபின் என்பவரையும் கைது செய்தனர். பாத்திமாவின் வீட்டில் பீரோவில் இறந்த நிலையில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பாத்திமாவிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

சிறுவனை கொலை செய்த ஆத்திரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட பாத்திமாவுன் வீடு
சிறுவனை கொலை செய்த ஆத்திரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட பாத்திமாவுன் வீடு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாத்திமாவின் கணவர் சரோபின் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். ஒருவிதத்தில் சிறுவனுக்கு உறவினரும்கூட. பாத்திமா பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். அதில் பலருக்கு பணம் திரும்பக்கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் கூறுகிறார்கள். இந்த நிலையில்தான், வாணியக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 60,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 21-ம் தேதிக்குள் பணத்தை தராமல் இருந்தால் குடும்பத்துடன் வீட்டுக்கு முன் வந்து போராட்டம் நடத்துவோம் என அந்த பெண் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கைது செய்யப்பட்ட பாத்திமா
கைது செய்யப்பட்ட பாத்திமா

இதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவனின் செயின், பிரேஸ்லெட் ஆகியவற்றை அபகரிக்க பாத்திமா திட்டம் தீட்டியுள்ளார். இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஜோகன் ரிஷியை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தலையணையை வைத்து, சிறுவனின் முகத்தை அமுக்கியதுடன், தலையணை மீது ஏறி உட்காரவும் செய்திருக்கிறார். சிறுவன் இறந்ததை உறுதி செய்ததும், உடலை துணியில் சுற்றி பீரோவுக்குள் வைத்து பூட்டியிருக்கிறார். பின்னர் வங்கிக்கு போவதாக தன் குழந்தைகளிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார் பாத்திமா.

பாத்திமாவின் கணவர் சரோபின்
பாத்திமாவின் கணவர் சரோபின்

குளச்சலுக்குச் சென்று சிறுவனின் செயின் மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றை 40,000 ரூபாய்க்கு விற்று, அந்த பணத்தை வாணியக்குடியைச் சேர்ந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அந்த சமயத்தில் விசாரணைக்காக போலீஸ் அந்த பகுதியில் குவிந்தது. இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்திய போலீஸாருக்கு டீ போட்டு கொடுத்துள்ளார் பாத்திமா. சிறுவனை கொலை செய்த விவரத்தை கணவனிடம் சொல்லியிருக்கிறார். போலீஸ் இங்கிருந்து சென்ற பிறகு உடலை கடலில் வீசிவிடலாம் என கணவன் ஐடியா கொடுத்திருக்கிறார்.

போலீஸார் விசாரணையின்போது பத்திமாவின் குழந்தைகளிடம் பேசியிருக்கிறார்கள். அப்போது அம்மா வங்கிக்கு போன விஷயத்தை குழந்தைகள் சொன்னதால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அனைத்து உண்மைகளையும் பாத்திமா கூறிவிட்டார்" என்றனர்.

போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற் சமயத்தில்தான், ஊர் மக்கள் பாத்திமாவின் வீட்டை உடைத்தனர். பீரோவை உடைக்கும்போது துணியில் சுற்றப்பட்ட சிறுவனின் உடல் வெளியே வந்து விழுந்துள்ளது. நகைக்காக பிஞ்சுக் குழந்தையை கொலை செய்த பாத்திமாவுக்கு கடுமையன தண்டனை வழங்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism