Published:Updated:

பண்ணை வீட்டுக்குள் சடலமாகக் கிடந்த மனைவி... தோட்டத்தில் மயங்கியநிலையில் கணவர்! - என்ன நடந்தது?

க்ரைம் - கொலை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பண்ணை வீட்டுக்குள் பெண் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்துக்குள் கணவர் மயக்கநிலையில் கிடந்தார். அது தொடர்பாக கானத்தூர் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

பண்ணை வீட்டுக்குள் சடலமாகக் கிடந்த மனைவி... தோட்டத்தில் மயங்கியநிலையில் கணவர்! - என்ன நடந்தது?

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பண்ணை வீட்டுக்குள் பெண் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்துக்குள் கணவர் மயக்கநிலையில் கிடந்தார். அது தொடர்பாக கானத்தூர் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Published:Updated:
க்ரைம் - கொலை

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரை அடுத்த பழைய கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்திருக்கிறது. அதில், கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியைச் சேர்ந்த பரத்துடு (52) என்பவர் குடும்பத்தோடு தங்கி வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி சுஜாதா (48). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியிருக்கிறது. அதனால் ஆத்திரமடைந்த பரத்துடு, மனைவி சுஜாதாவின் கழுத்தைப் புடவையால் நெரித்திருக்கிறார். இதில் அவர் மயங்கி விழுந்திருக்கிறார். நீண்ட நேரமாகியும் சுஜாதா கண்விழிக்கவில்லை.

கொலை
கொலை

அதனால் பயந்துபோன, பரத்துடு தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்கிறார். அதையடுத்து அவரும் மயங்கி விழுந்திருக்கிறார். அம்மாவும் அப்பாவும் மயங்கிநிலையில் கிடப்பதைப் பார்த்த அவர்களின் மகன் வெங்கடேஷ், ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து இருவரையும் ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அங்கு சுஜாதாவைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பரத்துடுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேல் சிகிச்சைக்காக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குவந்த போலீஸார், சுஜாதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் சுஜாதா கொலைசெய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து கொலை வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து கானத்தூர் போலீஸார் கூறுகையில், ``பண்ணை வீட்டுக்குள் சுஜாதா கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். வெளியிலுள்ள தோட்டத்தில் பூச்சிமருந்து குடித்து பரத்துடு மயங்கிக் கிடந்தார். மனைவியைக் கொலைசெய்துவிட்டு பரத்துடு விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இருப்பினும் பரத்துடு மயக்கநிலையில் இருப்பதால், அவரிடம் விசாரித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதால் ஒருவேளை பரத்துடு, மனைவி சுஜாதாவைக் கொலைசெய்திருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது" என்றனர்.