Published:Updated:

ராஜபாளையம்: மளிகைக் கடைக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - திருமணம் தாண்டிய உறவால் விபரீதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம்
ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம்

விருதுநகரில் திருமணம் தாண்டிய உறவால் ஏற்பட்ட விபரீதத்தால் மளிகைக்கடைக்குள் புகுந்து பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர், மளிகைக்கடை நடத்திவருகிறார். இவரின் மனைவி இந்திராணி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகள், மதுரை கல்லூரியிலும் மகன், ராஜபாளையளையத்திலுள்ள தனியார் கல்லூரியிலும் படித்துவருகின்றனர். கணேசன் கடையில் இல்லாத நேரத்தில் இந்திராணி கடையைப் பார்த்துக்கொள்வாராம். கணேசன், வழக்கம்போல சந்தையில் காய்கறிகளை வாங்கச் சென்ற நேரத்தில் இந்திராணி கடையில் இருந்திருக்கிறார்.

கொலைசெய்யப்பட்ட இந்திராணி
கொலைசெய்யப்பட்ட இந்திராணி

இந்த நிலையில் காய்கறி வாங்கிய கணேசன், இந்திராணிக்குப் போன் செய்திருக்கிறார். பல முறை தொடர்புகொண்டும் இந்திராணி, போனை எடுக்காததால் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு போன் செய்து கடைக்குச் சென்று பார்க்கச் சொன்னபோது கடைக்குள் இந்திராணி மார்பு, வயிறு, கழுத்துப் பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார்.

இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்ற பரமசிவத்துக்கும் இந்திராணிக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாகத் திருமணம் தாண்டிய உறவு இருந்துவந்தது தெரியவந்தது. அடிக்கடி இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பரமசிவம், இந்திராணியை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறாராம். இதனால், மனவேதனை அடைந்த இந்திராணி பரமசிவத்தின் தொடர்பைத் துண்டித்துவிட்டு விலகி இருந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ராஜபாளையம் தெற்குக் காவல் நிலையத்தில் இந்திராணி, பரமசிவம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகப் புகார் அளித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பரமசிவம், அழகுராஜா
கைதுசெய்யப்பட்ட பரமசிவம், அழகுராஜா

அந்தப் புகாரின் பேரில் போலீஸார், பரமசிவத்தின் மீது வழக்கு பதிவு செய்து, கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். பரமசிவம், மீண்டும் பாலியல்ரீதியாக இந்திராணியிடம் தொந்தரவு செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில் ஊர் சமுதாயப் பெரியோர்கள் மத்தியில் சமாதானப் பேச்சுவார்த்தையும் நடத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்திராணி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து பரமசிவம் மற்றும் கொலைக்கு உறுதுணையாக இருந்த அழகுராஜாவையும் போலீஸார் கைதுசெய்தனர். போலீஸாரின் விசாரணையில், ``நானும் இந்திராணியும் நெருங்கிப் பழகினோம். எங்களது உறவு இந்திராணியின் கணவர் கணேசனுக்குத் தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு என்னிடம் பேசுவதை இந்திராணி தவிர்த்துவந்தார். நான் எவ்வளவோ முயற்சி செஞ்சும் என்கிட்டப் பேசலை. ஒரு கட்டத்துல ரெண்டு பேருக்கும் பயங்கர வாக்குவாதம் வந்துச்சு. அதை மனசுலவெச்சுக்கிட்டு என் மேல போலீஸ்ல புகார் கொடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டா. இதனால எனக்கு அவள் மேல இருந்த கோபம் இன்னும் அதிகமாச்சு. ஜெயில்ல இருந்து வெளியே வந்ததும் பேச முயற்சி செஞ்சேன்.

ராஜபாளையம் தெற்குக் காவல் நிலையம்
ராஜபாளையம் தெற்குக் காவல் நிலையம்

ஆனா, அவள் பேசவே இல்லை. அதனால, அவளைக் கொலை செய்யலாம்னு முடிவு செஞ்சேன். என் நண்பர் அழகுராஜாவைக் கூட்டிட்டுப் போனேன். கணேசன் கடைக்குப் போகுற நேரத்துல இந்திராணிதான் கடையில இருந்து வியாபாரம் பார்ப்பா. அதனால, கணேசன் இல்லாத நேரமாப் பார்த்து கடைக்குப் போனேன். ஆனா, அப்பவும் என்கிட்ட அவள் பேசவே இல்லை. அதனால, மிளகாய்த்தூளை முகத்துல தூவினேன், எரிச்சல்ல கண்ணைக் கசக்கிட்டு கீழே விழுந்துட்டா. கோபத்துல கத்தியால குத்தி கொன்னுட்டேன்” என சொல்லியிருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு