Published:Updated:

கோவை:பெண் அதிகாரி பாலியல் புகார்; லெப்டினன்ட் கைது!-விமானப்படைப் பயிற்சிக் கல்லூரியில் நடந்தது என்ன?

பாலியல் வன்கொடுமை ( representational image )

கோவை விமானப்படைப் பயிற்சிக் கல்லூரியில் பெண் அதிகாரியைப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் லெப்டினன்ட் கைதுசெய்யப்பட்டார்.

கோவை:பெண் அதிகாரி பாலியல் புகார்; லெப்டினன்ட் கைது!-விமானப்படைப் பயிற்சிக் கல்லூரியில் நடந்தது என்ன?

கோவை விமானப்படைப் பயிற்சிக் கல்லூரியில் பெண் அதிகாரியைப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் லெப்டினன்ட் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( representational image )

கோவை சுங்கம் பகுதியில் இந்திய விமானப்படையின் பயிற்சிக் கல்லூரி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பல்வேறு மாநிலங்களிலிருந்து 30 அதிகாரிகள் பயிற்சிக்காக அங்கு வந்துள்ளனர்.

விமானப்படை
விமானப்படை
representational image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தநிலையில், அங்குள்ள பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷ் என்பவர், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பயிற்சிக்கு வந்த பெண் அதிகாரி ஒருவர் கோவை மாநகர காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து காவல்துறை, விமானப்படை பயிற்சிக் கல்லூரி வட்டாரங்களில் விசாரித்தோம். ``கடந்த சில நாள்களுக்கு முன்பு பயிற்சிக் கல்லூரியில் மது விருந்து நடைபெற்றது. மது விருந்துக்குப் பின்னர் பெண் அதிகாரி தனது அறையில் ஓய்வெடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. விளையாட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அன்று மருந்து எடுத்துக்கொண்டு தூங்கியதாகப் பெண் அதிகாரி புகாரில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவை
கோவை

அன்றைய தினம் இரவுதான் அமிர்தேஷ், அந்தப் பெண் அதிகாரியைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பெண் விமானப்படையிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால், போதுமான வேகத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுவில்லை என்பதால் அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அமிர்தேஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரைக் கைதுசெய்து போலீஸார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, `விமானப்படை அதிகாரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று அமிர்தேஷின் வழக்கறிஞர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார்.

கைது
கைது

அந்த விவகாரத்தில் கோவை காவல்துறை பதிலளிக்கக் கூறி, அமிர்தேஷை ஒரு நாள் மட்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, அமிர்தேஷ் உடுமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். ``அமிர்தேஷ் மீதான புகார் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். குற்றம் உறுதியானால் அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

விமானப்படை
விமானப்படை
representational image

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்று விமானப்படை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.