Published:Updated:

`பயன்படுத்தப்பட்ட 5 தோட்டாக்கள்..!' - மதுரைக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயவாடா பெண் பயணி

பிடிபட்ட தோட்டாக்கள்
பிடிபட்ட தோட்டாக்கள்

இன்று மதியம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பெண் பயணி ஒருவரின் லக்கேஜை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது பையில் துப்பாக்கிக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மதுரை விமான நிலையத்தில் பெண் பயணியை சோதனை செய்ததில் அவரிடம் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்தப் பெண் காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

பொகாடி லட்சுமி  லாவன்யா
பொகாடி லட்சுமி லாவன்யா

இன்று மதியம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பெண் பயணி ஒருவரின் லக்கேஜை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது பையில் துப்பாக்கிக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், பயன்படுத்தப்பட்ட 5 தோட்டாக்களின் காலி உறைகளும் பயன்படுத்தாத 3 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

வெயில் காலத்தில் 20 அடி தூரத்துக்குப் பரவும் கொரோனா வைரஸ்... எப்படி தப்பிப்பது? #ExpertOpinion

பொகாடி லட்சுமி லாவன்யா என்ற பெயர் கொண்ட அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பிடிபட்ட தோட்டாக்கள்
பிடிபட்ட தோட்டாக்கள்

துப்பாக்கித் தோட்டாக்கள் அவரிடம் எப்படி வந்தன, பயன்படுத்தப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் ஏதேனும் அசம்பாவித சம்பவத்துடன் சம்பந்தப்பட்டதா... ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையவரா... என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

துப்பாக்கித் தோட்டாக்கள் பிடிபட்டது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், காவல்துறையினரும் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடையாள அட்டை
அடையாள அட்டை

கொரோனா ஊரடங்கு நேரத்தில் குறைந்த அளவு விமான சேவை தொடங்கி நான்கு நாள்கள் ஆகியுள்ள நிலையில் துப்பாக்கித் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, கோவை, சென்னை... கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தமிழகத்தில் தொடங்கப்பட்ட விமான சேவை! #PhotoAlbum
அடுத்த கட்டுரைக்கு