Published:Updated:

``வெட்டிடுவோம்; எங்களையே காட்டிக்கொடுக்குறியா"- இளம்பெண்ணை வீடு புகுந்து மிரட்டிய கோழித் திருடர்கள்

மேற்கு காவல் நிலையம்

தூத்துக்குடியில் கோழித் திருட்டுச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிப்பதிவுகளை போலீஸாருக்குக் கொடுத்த குடும்பத்தினரை அரிவாள்வைத்து மிரட்டிய 10 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

``வெட்டிடுவோம்; எங்களையே காட்டிக்கொடுக்குறியா"- இளம்பெண்ணை வீடு புகுந்து மிரட்டிய கோழித் திருடர்கள்

தூத்துக்குடியில் கோழித் திருட்டுச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிப்பதிவுகளை போலீஸாருக்குக் கொடுத்த குடும்பத்தினரை அரிவாள்வைத்து மிரட்டிய 10 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
மேற்கு காவல் நிலையம்

தூத்துக்குடி கோவில்பட்டி, இந்திரா நகரில் வசித்துவருபவர் லாவண்யா. இவரின் கணவர் தாமோதர கண்ணன். இவர், வெளிநாட்டில் பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில் லாவண்யா, அவர் தாயுடன் வசித்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு லாவண்யாவின் வீட்டின் எதிரேயிருக்கும் ஒரு வீட்டில் 10-க்கும் மேற்பட்ட கோழிகள் திருட்டு போயிருக்கின்றன. கோழித் திருட்டு தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், லாவண்யாவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை எதிர்வீட்டினர் கேட்டு வாங்கியிருக்கின்றனர்.

அரிவாளைக் காட்டி மிரட்டிய கோழித் திருடர்கள்
அரிவாளைக் காட்டி மிரட்டிய கோழித் திருடர்கள்

அந்த சிசிடிவி காட்சிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருகின்றன. இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவரும் நிலையில், லாவண்யாவின் வீட்டுக்குச் சென்ற சிலர்  அவரின் வீட்டு வாசலில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசை வெடிக்கவைத்து ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். பட்டாசு சத்தம் கேட்டு வெளியே வந்த லாவண்யா, ``நீங்க யாரு... எங்க வீட்டு முன்னால வந்து பட்டாசு வெடிக்கிறீங்க?" எனக் கேட்டிருக்கிறார்.

வீட்டின் கதவு மீது ஏறி கார் பார்க்கிங்குக்குள் புகுந்த அவர்கள், காரின் மீதும், சுவரின் மீதும் நின்றுகொண்டு கையில் வைத்திருந்த அரிவாளைக் காட்டி, ``யார் வீட்ல கோழி திருடு போனா உனக்கு என்ன... சிசிடிவி கேமரா ஃபுட்டேஜை போலீஸுக்குக் கொடுப்பியா... உன்னையும் உங்க அம்மாவையும் வெட்டிவோம்” எனச் சொல்லி மிரட்டியிருக்கின்றனர். அவர் கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து சென்றிருக்கின்றனர். இது குறித்து லாவண்யா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

காரின் மீது நின்று கொண்டு மிரட்டும் கோழி திருடன்
காரின் மீது நின்று கொண்டு மிரட்டும் கோழி திருடன்

மீண்டும் சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் ரகளையில் ஈடுபட்டவர்களை போலீஸார் அடையாளம் கண்டுகொண்டனர். இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், மருதுபாண்டி, பூபேஷ் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கோவில்பட்டி பகுதியில் கோழித் திருட்டுச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிப் பதிவுகளை வழங்கிய குடும்பத்தை அரிவாளை வைத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.