Published:Updated:

ஆபாச வீடியோ... புகைப்படங்கள்; மனைவி எண்ணை 30 நண்பர்களுக்கு பகிர்ந்த கணவன்! - போலீஸ் விசாரணை

மனைவி எண்ணை பகிர்ந்த கணவன்

தன்னுடைய செல்போன் எண்ணை 30 நண்பர்களுக்கு பகிர்ந்த கணவன்மீது மனைவி புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆபாச வீடியோ... புகைப்படங்கள்; மனைவி எண்ணை 30 நண்பர்களுக்கு பகிர்ந்த கணவன்! - போலீஸ் விசாரணை

தன்னுடைய செல்போன் எண்ணை 30 நண்பர்களுக்கு பகிர்ந்த கணவன்மீது மனைவி புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மனைவி எண்ணை பகிர்ந்த கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியில் தன்னுடைய செல்போன் எண்ணை 30 நண்பர்களுக்குப் பகிர்ந்த கணவன்மீது மனைவி புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண், ``கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கும் ஆகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

என் திருமணத்துக்காக என் பெற்றோர் ரூபாய் 15 லட்சம் வரை செலவு செய்திருந்தார்கள். திருமணத்தின்போது என்னுடைய கணவர் ஆகாஷ் நல்ல வேலையில் இருப்பதாகக் கூறினார்கள். ஆனால், திருமணத்துக்கு பிறகே அவர் வேலையில்லாமல் இருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொண்டேன். அதனாலேயே அவ்வப்போது எனக்கும் ஆகாஷுக்கும் சண்டை வரத் தொடங்கியது.

வாட்ஸ்அப் வீடியோ கால்
வாட்ஸ்அப் வீடியோ கால்

இதனால் கடந்த 2021-ம் ஆண்டு என்னை அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார்கள். எங்கள் தரப்பில் பலமுறை சமாதானம் செய்ய முயன்றோம். ஆனால் அவர்களிடமிருந்து வசைச் சொற்களும், அவமானமும்தான் மிஞ்சின. இறுதியாக அவர்களின் தொல்லை தாங்காமல் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆபாச மிரட்டல்கள்
ஆபாச மிரட்டல்கள்

அதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் என் செல்போன் எண்ணை அவருடைய 30 நண்பர்களுக்குக் கொடுத்து என்னிடம் ஆபாசமாக பேசச் சொல்லியிருக்கிறார். அதேபோல எனக்கும் ஆபாசமான வாய்ஸ் நோட்ஸ், புகைப்படங்கள், வீடியோக்கள், நடு இரவில் வீடியோ கால் எனத் தொல்லைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன" எனத் தெரிவித்திருக்கிறார். இளம்பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.