Published:Updated:

தென்காசி: மதுபோதையில் தொல்லை தந்த கணவன் - தீ வைத்து எரித்துக் கொன்ற மனைவி!

தீ வைத்து எரிப்பு ( மாதிரிப்படம் )

மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை மனைவி தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி: மதுபோதையில் தொல்லை தந்த கணவன் - தீ வைத்து எரித்துக் கொன்ற மனைவி!

மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை மனைவி தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தீ வைத்து எரிப்பு ( மாதிரிப்படம் )

தென்காசி மாவட்டம் சிவகிரி மேலரதவீதி இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர், பரமசிவன் என்ற துரை. இவர் மனைவி முத்துமாரி. ஒன்பது வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

பரமசிவனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மதுபோதை தலைக்கேற வீட்டுக்கு வந்ததும் மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது குடித்த அவரால் நடந்து வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் அங்குள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் படுத்துக் கிடந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கணவன் வீட்டுக்கு வராததால் அவரை தேடிச் சென்ற முத்துமாரி எழுப்பியிருக்கிறார். போதையின் உச்சத்தில் இருந்த பரமசிவன் மதுபோதையுடன் கூடிய தூக்கத்தில் இருந்து விழித்ததும் எதிரில் தெரிந்த மனைவியை அவதூறாகப் பேசியுள்ளார். அவரது நடத்தை பற்றியும் அருவருக்கத் தக்க வகையில் விமர்சித்திருக்கிறார்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

அதனால் ஆத்திரம் அடைந்த முத்துமாரி அங்கிருந்து சென்று பெட்ரோலுடன் மீண்டும் பரமசிவன் படுத்திருந்த இடத்துக்குச் சென்றிருக்கிறார். அதற்குள் தூங்கிவிட்டிருந்த அவரை மீண்டும் எழுப்பிய முத்துமாரி, கையில் கொண்டு சென்றிருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடல் முழுவதும் பற்றி எரிந்த நெருப்புடன் பரமசிவன் உயிருக்குப் போராடியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத முத்துமாரி, ‘உன்னால் குடும்பத்துக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் செத்து தொலைடா..’ என்று சொல்லியபடியே வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

நெல்லை அரசு மருத்துவமனை
நெல்லை அரசு மருத்துவமனை

உடலில் பற்றி எரியும் நெருப்புடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த பரமசிவனுக்கு அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உதவி செய்து தீயை அணைத்துள்ளனர். அத்துடன், அவரை சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து தென்காசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நான்கு நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிவகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன், கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த முத்துமாரியை கைது செய்தார். மதுபோதை காரணமாக பரமசிவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பற்றி சிவகிரி மக்கள் சோகத்துடன் பேசி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism