Published:Updated:

ஜம்மு-காஷ்மீர்: பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்... காஷ்மீர் பண்டிட் ஆசிரியை சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பள்ளிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஓர் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஜினி பாலா (வயது 36). இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். இவர் காஷ்மீரி பண்டிட் சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

கொலை
கொலை

இந்த நிலையில், ஆசிரியை ரஜினி பாலா இன்று காலை பள்ளிக்கு வந்து, வழக்கமான பணிகளை மேற்கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் ரஜினி பாலாவைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, அருகிலிருந்த சக ஆசிரியர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளைத் தேடிவருகின்றனர்.

அண்மையில் டி.வி நடிகை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற நிலையில், தற்போது இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism