Published:Updated:

உ.பி: `ஆசிட்டில் மிளகாய்ப்பொடி கலந்து...’ - கணவனின் கொடுமையால் மனைவி எடுத்த முடிவு

ஆசிட்

40 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ள யாசீனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

உ.பி: `ஆசிட்டில் மிளகாய்ப்பொடி கலந்து...’ - கணவனின் கொடுமையால் மனைவி எடுத்த முடிவு

40 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ள யாசீனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Published:Updated:
ஆசிட்

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி பகுதியில் முகமது யாசீன் என்பவர் தன் மனைவி ஃபர்ஹா, 4 வயது மகளுடன் வசித்துவந்திருக்கிறார். யாசீன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடுமையாகக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த யாசீன், மனைவி ஃபர்ஹானாவை அடித்து, கொடுமைப்படுத்தி, பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட ஃபர்ஹா ஆசிட்டில் மிளகாய்பொடியைக் கலந்து, யாசீன் தூங்கும்போது அவர்மீது ஊற்றிவிட்டு, மகளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்.

கணவன் - மனைவி சண்டை
கணவன் - மனைவி சண்டை

இதைத் தொடர்ந்து யாசீனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். 40 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ள அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. யாசீனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஃபர்ஹா மீது ஐபிசி பிரிவு 326-ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், யாசீனின் சிகிச்சை முடிந்த பிறகு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. காவல்துறை மனைவி ஃபர்ஹாவைத் தேடிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!