Published:Updated:

மகளுக்குப் பாலியல் தொல்லை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற பெண்

தற்கொலைக்கு முயன்ற தாய்

மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகளுக்குப் பாலியல் தொல்லை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற பெண்

மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
தற்கொலைக்கு முயன்ற தாய்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவுக்குட்பட்ட இருக்கன்குடி கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தேங்காய் பழக்கடை நடத்திவருகிறார். இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 17 வயது மகள் சின்னையாபுரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களில் ஒருவர் 9-ம் வகுப்பும், மற்றொருவர் 6-ம் வகுப்பும் இருக்கன்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராஜாவின் மனைவி, தன் 17 வயது மகளுக்கு இருக்கன்குடி பேரூராட்சித் தலைவர் செந்தாமரை என்பவரின் மகன் சுலைமான் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை தட்டிக்கேட்டதற்கு தன்னை மானபங்கப்படுத்தி அரை நிர்வாணமாக்கியதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருக்கன்குடி காவல் நிலையத்தில் தெய்வானை பரபரப்பு புகார் அளித்தார். அவர் புகாரின் பேரில், பேரூராட்சித் தலைவர் செந்தாமரை, அவருடைய மகன்கள் சக்திமான், சுலைமான், ஜெயமான், செந்தாமரையின் சகோதரர்கள் மயில்வாகனன், கருணாகரன், மயில்வாகனனின் மகன்கள் நீதிமான், ரகுமான் உட்பட 8 பேர் மீது இருக்கன்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் செல்வாக்கானவர்கள் என்பதால் போலீஸார் கைது செய்யாமல் விட்டுவிட்டனர் எனக்கூறி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜாவின் மனைவி இன்று மனு அளித்தார். பின்னர், அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன்தலையிலும், தன்னுடன் வந்திருந்த மகன் அசோக் தலையிலும் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த ஆட்சியர் அலுவலக வருவாய் கிராம நிர்வாக பெண் அதிகாரி சுப்புலட்சுமி, விரைந்து செயல்பட்டு அவர்மீது தண்ணீர் ஊற்றி அவரைத் தடுத்து நிறுத்தினார். உடனே அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற தாயையும், மகனையும் பிடித்து தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். இதில் மயக்க நிலைக்குச் சென்ற ராஜாவின் மனைவிக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகளுக்குப் பாலியல் தொல்லை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற பெண்

அதையடுத்து, உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஏற்கெனவே செந்தாமரை மற்றும் அவர் மகன்களால் தாக்கப்பட்டதில் அவர் 10 நாள்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று கடந்த வாரம்தான் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று தற்கொலைக்கு முயன்று வலிப்பு ஏற்பட்டு மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராஜாவின் மனைவி புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ராஜாவின் மனைவி அவர் மகனுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism