Published:Updated:

வெளிநாட்டு வேலையில் கணவன்... இறப்புச் சான்றிதழ் மூலம் 25 லட்சம் மோசடி செய்த மனைவி - நடந்தது என்ன?

மோசடி (Representational Image)

"வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க இந்தியாவுக்கு வந்தேன். அப்போதுதான் என் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதை அறிந்தேன்." - நூர் ஜமால் ஷேக்

வெளிநாட்டு வேலையில் கணவன்... இறப்புச் சான்றிதழ் மூலம் 25 லட்சம் மோசடி செய்த மனைவி - நடந்தது என்ன?

"வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க இந்தியாவுக்கு வந்தேன். அப்போதுதான் என் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதை அறிந்தேன்." - நூர் ஜமால் ஷேக்

Published:Updated:
மோசடி (Representational Image)

மேற்கு வங்க முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நூர் ஜமால் ஷேக். இவர் சவுதி அரேபியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், அவர் தன் மனைவி மீது காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அவர் அளித்த புகாரில், "நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிவந்தேன். அதனால் நான் வங்கியில் டெபாசிட் செய்துவைத்த பணத்துக்கு என் மனைவிக்குத்தான் பொறுப்பளித்திருந்தேன்.

பணம்
பணம்

இந்த நிலையில், நான் வெளிநாட்டிலிருந்து வர தாமதமானதால் என் மனைவி என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவதாகக் கூறினார். அதன் பிறகு அவர் என்னைப் பிரிந்து சென்றுவிட்டார் என்பதால், வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க இந்தியாவுக்கு வந்தேன். அப்போதுதான் என் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதை அறிந்தேன். எனது இறப்புச் சான்றிதழைக் காண்பித்து, என் மனைவி பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல். இந்தச் சான்றிதழை வைத்து எனது சொத்துகளை அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டார் என்பதும் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டெபாசிட்
டெபாசிட்

மேலும், எனது பெயரில் இருந்த இன்ஷூரன்ஸ் தொகையையும் பெற்றிருக்கிறார். வங்கி நிர்வாகத்திடம் இதைத் தெரிவித்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. சுமார் ரூ.25 லட்சம் என்னிடம் மோசடி செய்திருக்கிறார். மேலும் என் மனைவிக்குத் திருமணம் தாண்டிய உறவு இருந்ததும் தெரியவந்திருக்கிறது. எனவே என் பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.