Published:Updated:

குமரி: 3 மகள்களை சிறார் வதைக்குத் தள்ளிய கொடூரத் தாய்! - பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் உட்பட 3 பேர் கைது

சிறுமிகளுடன் இருந்ததால் கைதுசெய்யப்பட்ட ராஜ்மோகன்
சிறுமிகளுடன் இருந்ததால் கைதுசெய்யப்பட்ட ராஜ்மோகன்

பள்ளி செல்லும் பெற்ற குழந்தைகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரத் தாய் லதா, பெண் காவல் ஆய்வாளரின் கணவர் ராஜ்மோகன், கூலித் தொழிலாளி சுனில் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மேட்டுக்கடைப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அடிக்கடி பகல், இரவு நேரங்களில் வெளியூரைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் வந்து சென்றிருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் அடைந்திருக்கின்றனர். மேலும், அங்கு பெண்களைவைத்து பாலியல் தொழில் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியானது.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் காதுகளுக்கும் தகவல் சென்றது. இதையடுத்து போலீஸார் அந்த வீட்டைத் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். இந்தநிலையில் தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் அந்த வீட்டில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டிலுள்ள ஓர் அறையில் இரண்டு சிறுமிகளும், ஓர் ஆணும் மற்றோர் அறையில் இரண்டு சிறுமிகளும் ஓர் ஆணும் இருந்திருக்கிறார்கள். அந்த ஆண்கள் அரை நிர்வாண கோலத்தில் இருந்திருக்கிறார்கள். போலீஸார் சென்றதும், அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஆண்களை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஒருவர் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரின் கணவரான குளச்சல் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் என்று தெரியவந்தது. மற்றொருவர் தக்கலை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுனில் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த வீட்டில் லதா என்ற மற்றொரு பெண் இருந்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட சுனில்
கைது செய்யப்பட்ட சுனில்

விசாரணையில் லதா மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. லதா தக்கலை மேட்டுக்கடைப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மூன்று மகள்களுடன் வசித்துவந்திருக்கிறார். மூத்தமகள் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். அதற்கு அடுத்த மகள் 12-ம் வகுப்பும், அதற்கு அடுத்த மகள் 10-ம் வகுப்பும் படித்து வந்திருக்கிறார்கள். மூன்று சிறுமிகளையும் பலவந்தமாக சில ஆண்கள் சிறார் வதை செய்ய லதா காரணமானதாகக் கூறப்படுகிறது. மேலும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளின் தோழியான ஒரு சிறுமியையும் லதா இப்படி சிறார் வதைக்கு உட்படுத்தியிருக்கிறார்.

நாகர்கோவில் சிறார் வதை: சீரான உடல் நலம்! - சிறையில் அடைக்கப்பட்ட நாஞ்சில் முருகேசன்

இதையடுத்து நான்கு சிறுமிகளையும் மீட்ட போலீஸார் அவர்களை ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த தக்கலை போலீஸார் பள்ளி செல்லும் பெற்ற குழந்தைகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரத் தாய் லதா, பெண் காவல் ஆய்வாளரின் கணவர் ராஜ்மோகன், கூலி தொழிலாளி சுனில் ஆகியோரைக் கைது செய்தனர்.

சிறுமிகளை சிறார் வதையில் ஈடுபடுத்திய லதா
சிறுமிகளை சிறார் வதையில் ஈடுபடுத்திய லதா

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``தற்போது சிறுமிகள் நான்கு பேருக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுவருகிறது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, அதன் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும், சிறுமிகளை சிறார் வதை செய்ததாகக் கூறப்படும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு