Published:Updated:

`கணவரைக் கொன்றுவிட்டு எஸ்கேப்; காட்டிக்கொடுத்த செல்போன்!- 6 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தம்பி, அண்ணி

கொழுந்தனாருடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவியை 6 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கொலை செய்யப்பட்ட முருகதாஸின் எலும்பை சேகரிக்கும் போலீஸ்
கொலை செய்யப்பட்ட முருகதாஸின் எலும்பை சேகரிக்கும் போலீஸ்

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கூழையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ் என்கிற முருகதாசன். இவர் சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்துவந்துள்ளார். இவருக்கும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி மகள் சுமிதாவுக்கும் 2001-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இருவரும் கடலூர் துறைமுகம் சிங்காரத்தோப்பில் வசித்துவந்தனர். இவர்களுக்கு முகுந்தன், முகேஷ் என இரு மகன்கள் உள்ளனர்.

உடல் பாகங்கள்
உடல் பாகங்கள்
எஸ். தேவராஜன்.

இந்நிலையில் முருகதாஸ் தாய் பவுனம்மாள் கடந்த ஆண்டு கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகாரில், `சுமிதாவின் தம்பி திருமணத்துக்கு வெளிநாட்டில் இருந்து முருகதாஸ் வந்தார். அதன் பின்பு அவர் காணவில்லை. இது குறித்து சுமிதா, அவரின் பெற்றோர் மற்றும் என் கடைசி மகன் சுமேர் ஆகியோரிடம் விசாரித்தும் எந்தத் தகவலும் இல்லை. நான் சென்னையில் சுமேர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சுமேருக்கும், சுமிதாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் இது தொடர்பாக முருகதாஸுக்கும் அவரின் தம்பி சுமேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, முருகதாஸை கழுத்தை நெரித்து சுமேர் கொலை செய்துள்ளார். பின்னர் அண்ணி சுமிதாவுடன் சேர்ந்து உடலை வீட்டுத் தோட்டத்தில் புதைத்துவிட்டு, கேரளா சென்றுவிட்டனர்.

கைது செய்யப்பட்ட தம்பி சுமேர், அண்ணி சுமிதா
கைது செய்யப்பட்ட தம்பி சுமேர், அண்ணி சுமிதா

முருகதாஸின் பாஸ்போர்ட் வீட்டில் இருக்கும்போது அவர் வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை. எனவே, எனது மகனை கண்டுப்பிடித்து தர வேண்டும். மற்றொரு மகன் சுமேர், மருமகள் சுமிதா மற்றும் அவரின் பெற்றோர் பக்கிரி, பரிமளா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, கடலூர் துறைமுகம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சுமிதாவின் மொபைல் எண்ணை ஆய்வு செய்ததில் அவர் கேரளா மாநிலம் திருச்சூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் திருச்சூரில் பதுங்கி குடும்பம் நடத்தி வந்த சுமேர், சுமிதா இருவரையும் கைது செய்து கடலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, முருகதாஸ் வெளிநாட்டில் வேலை செய்தபோது, அவரின் தம்பி சுமேருக்கும், சுமிதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த முருகதாஸ் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து இரண்டு பேரும் சேர்ந்து முருகதாஸை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட முருகதாஸ்
கொலை செய்யப்பட்ட முருகதாஸ்

இதனையடுத்து முருகதாஸின் உடலை தோண்டி எடுக்க போலீஸார் முடிவு செய்தனர். நீண்ட நேரம் தேடலுக்கு பிறகு முருகதாஸின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனை டாக்டர் பாக்கியலெட்சுமி தலைமையிலான மருத்துக் குழுவினர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து தவறான பழக்கத்தை கண்டித்த அண்ணனை அண்ணிடன் சேர்ந்து கொலை செய்த சுமேர், சுமிதாவும் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.