Published:Updated:

`பச்சை நிற உடை; சிதைக்கப்பட்ட முகம்!’ - தெலங்கானா இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Representation image
Representation image

தெலங்கானா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

‘திஷா மரணம்’ நிகழ்ந்து சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் ஒரு இளம்பெண் சடலம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்கடிபள்ளி (Tangadipally) பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாலத்தின் கீழே இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதைக்கண்ட கிராம மக்கள் உடனடியாக போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

Representation image
Representation image

இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், ``மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இந்தப் பாலத்தின் கீழே இளம்பெண்ணின் சடலம் இருப்பதை காலை 7 மணியளவில் இப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்தத் தகவல் கிராமத்தில் பரவ அந்தப்பகுதியில் இருந்த மக்கள் கூடத்தொடங்கிவிட்டனர். இதன்பின்னர்தான் எங்களுக்குத் தகவல் தெரிந்தது.

இதையடுத்துச் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக இருந்தார். கொலையாளிகள் பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தைச் சிதைத்துள்ளனர். பெரிய கற்களைக் கொண்டு அவரது முகத்தைத் தாக்கியுள்ளனர். அந்தப்பெண் பச்சை நிற உடை அணிந்திருந்தார். கொலை எதற்காக நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அந்தப்பெண் கொலை செய்யப்பட்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்.

Representation image
Representation image

கொலை செய்யப்பட்ட பெண் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. மாவட்டத்தில் உள்ள பிற காவல்நிலையங்களில் இளம்பெண் மாயமானது தொடர்பான புகார்கள் இருக்கிறதா என்ற விவரங்களைச் சேகரித்து வருகிறோம். முகம் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமமாக இருக்கிறது. தனி ஒருவர் இந்தக்கொலையைச் செய்திருக்க வாய்பில்லை. இந்தப்பெண்ணை வேறு எங்கோ படுகொலை செய்து உடலைக்கொண்டு வந்து இங்கு வீசியுள்ளனர். இந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகிறோம். குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு