Published:Updated:

`அது நீங்க இல்லையா?' - இன்ஸ்டாகிராமில் 3 மாதங்களாகக் கணவன் என நினைத்து சாட் செய்து அதிர்ந்த பெண்

சமூக வலைதளம்

கணவர் என நினைத்து மர்ம நபர் ஒருவருடன் மூன்று மாதங்களாகப் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகியிருக்கிறார்.

`அது நீங்க இல்லையா?' - இன்ஸ்டாகிராமில் 3 மாதங்களாகக் கணவன் என நினைத்து சாட் செய்து அதிர்ந்த பெண்

கணவர் என நினைத்து மர்ம நபர் ஒருவருடன் மூன்று மாதங்களாகப் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகியிருக்கிறார்.

Published:Updated:
சமூக வலைதளம்

சமூக வலைதளங்கள் பிரபலமான பிறகு கணவன், மனைவிகூட அதில்தான் உரையாடிக்கொள்கின்றனர் என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. முகம் தெரியாமல் பலர் சமூக வலைதளங்களில் பழகி பணத்தையும் இழக்கின்றனர். சமூக வலைதள மோசடிகளும் அதிகரித்திருக்கின்றன. மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் என நினைத்து இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் சாட் செய்துவந்திருக்கிறார். மூன்று மாதங்களுக்குப் பிறகே அது தன் கணவர் இல்லை என்று தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.

மும்பை தீன்தோஷி என்ற இடத்தைச் சேர்ந்த 40 வயது பெண் இன்ஸ்டாகிராமில் தன் கணவர் என்று நினைத்து ஒருவருடன் பழகிவந்தார். இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்துகொண்டனர். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்தப் பெண்ணிடம் அவரின் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பும்படி இன்ஸ்டாகிராமில் பேசிய நபர் கேட்டார். கணவர்தானே கேட்கிறார் என்று நினைத்து அந்தப் பெண்ணும் தனது அந்தரங்கப் புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பிவைத்தார். ஆனால் அந்த நபர் மேலும் அதிகமான அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது அந்தப் பெண் அனுப்ப மறுத்தபோது தன்னிடம் இருக்கும் அந்தரங்கப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். உடனே அந்தப் பெண் தன் கணவரிடம் நேரடியாக இது குறித்துக் கேட்டு சண்டையிட்டார். அதன் பிறகுதான் தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பேசியது தன்னுடைய கணவர் இல்லை என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது.

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தத் தம்பதி இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகியது அதே கட்டடத்தில் வசிக்கும் 20 வயது வாலிபர் என்று தெரியவந்தது. அந்த வாலிபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நவராத்திரி விழாவில் ஏற்பட்ட பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே அதற்குப் பழிவாங்க அந்தப் பெண்ணின் கணவர் பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு திறந்து, அவரிடம் சாட்டிங் செய்துள்ளார். அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அந்தப் பெண்ணின் புரொஃபைல் போட்டோவைத் திருடி, தனது புரொஃபைலில் வைத்தார். இதனால் அந்தப் பெண்ணும் நம்பினார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதே போன்று மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் ஜிமெயில் கணக்கை ஹேக் செய்து அவரின் சாட்டிங் விவரங்களில் திருத்தம் செய்து, அதை அந்தப் பெண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு மர்ம நபர் ஒருவர் அனுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண் கொடுத்துள்ள புகாரில், கடந்த ஜனவரி மாதம் தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், இப்போது தனது ஜிமெயில் கணக்கும் ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்த சாட்டிங் விவரங்கள் திருடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஹேக்கிங்
ஹேக்கிங்

தனது மெயிலில் இருக்கும் சாட்டிங் விவரங்களைத் திருடி அதில் திருத்தம் செய்து தனக்கு தெரிந்தவர்களுக்கு மர்ம நபர் அனுப்பியிருக்கிறார். இதனால்தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் தங்களது திருமணத்தை ரத்து செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இந்த ஹேக்கிங் விவகாரத்தில் தன்னுடன் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவருக்குத் தொடர்பு இருக்கும் என்று சந்தேகப்படுவதாகவும் கூறும் அவர், `அவர் என்னிடம் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கையை நான் நிராகரித்துவிட்டேன். எனவே அவர் என்னைச் சித்ரவதை செய்ய ஆரம்பித்துவிட்டார்’ என்றும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். பெண்கள் ஆன்லைனில் யாருடனும் பழகும்போது எதிரில் இருப்பது யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு பழக வேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டனர்.