Published:Updated:

சென்னை: செயற்கைப் பல்லால் உயிரிழந்த இளம்பெண்?! - தண்ணீர் குடிக்கும்போது நடந்த விபரீதம்

பல்
பல்

சென்னையில் இளம்பெண் ஒருவர், கடந்த வாரம் செயற்கையாக 3 பற்களைப் பொருத்தியிருக்கிறார். அவர், தண்ணீர் குடித்தபோது செயற்கையாகப் பொருத்திய பல் ஒன்று தொண்டைக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தாக வெளியான தகவல் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், கே.பி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (48). இவர் புத்தகக்கடை நடத்திவருகிறார். இவரின் மனைவி ராஜலட்சுமி (43). இவருக்கு பல்லில் சில பிரச்னைகள் ஏற்பட்டதால், அந்தப் பகுதியிலுள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றார். அவரைப் பரிசோதித்த டாக்டர், `உங்களுக்கு மூன்று பற்களில் பிரச்னை இருக்கிறது. அதனால் அவற்றை அகற்றிவிட்டு செயற்கையாகப் பற்களைக் கட்ட வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி ராஜலட்சுமிக்கு வாயில் மூன்று செயற்கைப் பற்கள் பொருத்தப்பட்டன. சிகிச்சைக்குப் பிறகு ராஜலட்சுமி, வழக்கமான வேலைகளைச் செய்துவந்தார்.

பல்
பல்

இந்தநிலையில் இன்று அவர் வீட்டில் தண்ணீர் குடித்திருக்கிறார். அப்போது செயற்கையாகப் பொருத்தப்பட்ட பல் ஒன்று கழன்று தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது. அதனால் மூச்சுவிட முடியாமல் திணறியிருக்கிறார். அதைப் பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு ராஜலட்சுமிக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் எதுவும் தெரியவில்லை. அதற்குள் அவர் மயங்கிவிட்டார். இதையடுத்து போரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ராஜலட்சுமியைக் கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே ராஜலட்சுமி உயிரிழந்துவிட்டார் என்று கூறினர். அதைக் கேட்டு அவரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை:`` அவள் என் லவ்வர்; அவளுக்குத் தொல்லை கொடுக்காதே" - இளைஞரைக் கொலை செய்த கும்பல்!

இது குறித்து ராயலா நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜலட்சுமியின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ராஜலட்சுமி, பல்லை விழுங்கியதால் உயிரிழந்தாரா அல்லது அவரின் மரணத்துக்கு வேறு காரணமா என்று பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியவரும்.

அடுத்த கட்டுரைக்கு