Published:Updated:

சென்னை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பக்கத்து வீட்டுக்காரர் கைது

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பிரபு

தனியாக வீட்டிலிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பக்கத்து வீட்டுக்காரர் கைது

தனியாக வீட்டிலிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பிரபு

சென்னை காசிமேடு பகுதியில் வசிக்கும் மாமியார் வீட்டுக்கு சில தினங்களுக்கு முன் சித்ரா (பெயர் மாற்றம்) என்பவர் கணவரோடு வந்தார். சித்ராவின் கணவரும் அவரின் மாமியாரும் கடந்த 10.5.2022-ம் தேதி வெளியில் சென்று விட்டனர். அதனால் சித்ரா மட்டும் தனியாக வீட்டிலிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபாகரன் என்கிற பிரபு என்பவர் சித்ராவின் வீட்டின் கதவை தட்டி குழம்பு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதனால் சித்ராவும் குழம்பு எடுக்க வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் வந்த பிரபு, சித்ராவின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா, சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சித்ராவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அதைப்பார்த்த பிரபு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அதுதொடர்பாக சித்ரா தன்னுடைய கணவர், குடும்பத்தினரிடம் விவரத்தைக் கூறினார். இதையடுத்து காசிமேடு காவல் நிலையத்தில் சித்ரா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சித்ராவுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் பிரபுவை கைது செய்தனர். விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபுவை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism