Published:Updated:

`உனக்கு மட்டும் குழந்தை இருக்கு!’ - தூத்துக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணால் நடந்த விபரீதம்

தூத்துக்குடியில் 6 மாத ஆண் குழந்தையைப் பெண் ஒருவர், கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையம்
காவல் நிலையம்

தூத்துக்குடி, முல்லைநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், செல்வகணேஷ் என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது. செல்வராஜ், தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், வழக்கம்போல வேலைக்குச் சென்றுள்ளார். வீட்டிலிருந்த நந்தினி, தனது குழந்தைக்குக் பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்துள்ளார்.

`உனக்கு மட்டும் குழந்தை இருக்கு!’ - தூத்துக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணால் நடந்த விபரீதம்

இந்த நிலையில், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என நந்தினி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் குழந்தையைத் தேடிப் பார்த்தனர். அப்போது வீட்டின் முன்புறம் இருந்த உறை கிணற்றில் குழந்தை செல்வகணேஷ் கிடந்ததைப் பார்த்து அலற, அப்பகுதியிலிருந்த இளைஞர்கள் சிலர் கிணற்றிலிருந்து குழந்தையை மீட்டனர். அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவே, பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்கள்.

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பான போலீசாரின் விசாரணையில், நந்தினி வீட்டில் கடந்த சில நாள்களாக தங்கியிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட நந்தினியின் அத்தை பஞ்சவர்ணம் குழந்தையைக் கிணற்றில் வீசி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நந்தினியின் கணவர் அளித்த புகாரின் பெயரில் பஞ்சவர்ணம் கைது செய்யப்பட்டார். விசாரணையின் அடுத்த கட்டமாக பஞ்சவர்ணம் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படுவார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது

காவல் நிலையம்
காவல் நிலையம்

`நந்தினியின் அத்தை பஞ்சவர்ணத்திற்கு, 4 வருசத்துக்கு முன்னால பிறந்த ஒரு ஆண் குழந்தை, தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தபோது மூச்சுத்திணறி இறந்து போச்சு. அந்த அதிர்ச்சியில அவளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து, எந்தக் குழந்தையைப் பாத்தாலும் பொறாமைப் படுவா. கோபப்பட்டுப் பேசுவா. பஞ்சவர்ணத்தின் அப்பா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டதுனால பஞ்சவர்ணம், கடந்த சில நாளா நந்தினி வீட்டுலதான் இருந்தா.

`` `கிட்டப் போனா கடிச்சிடுவாரு'ன்னாங்க, ஆனா நான் தயங்கல!'' மனநலம் பாதித்தவரை மீட்ட காவலர்

`எனக்கே பிள்ளை இல்ல. உனக்குப் பிள்ளையா'ன்னு பஞ்சவர்ணம் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாளாம். மனநிலை பாதிக்கப்பட்டதுனால அத்தை ஏதோ பேசிட்டுப் போறான்னு நந்தினி அதைப் பெருசா எடுத்துக்கல. இந்த நிலையிலதான் தொட்டிலில் தூங்கிக்கிட்டிருந்த புள்ளையைத் தூக்கி கிணத்துல வீசிருக்கா" என்றனர் அதிர்ச்சி விலகாத அப்பகுதியினர். 6 மாத ஆண் குழந்தை கிணற்றி வீசி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.