Published:Updated:

ஆலங்குளம்: வீட்டிலிருந்த இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை! - முதல் கணவர் வெறிச்செயல்

கிராமத்துக்கு வந்த முதல் கணவர், திருமணப் பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களிடம் சங்கீதாவின் முகவரியைக் கேட்டுப் பெற்றுள்ளார். பின்னர் வீட்டைக் கண்டுபிடித்து கொலை செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள கல்லூத்து என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், பொன்ராஜ். 28 வயது நிரம்பிய கூலித் தொழிலாளியான பொன்ராஜின் மனைவி சங்கீதா (26). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

கொலைசெய்யப்பட்ட சங்கீதா
கொலைசெய்யப்பட்ட சங்கீதா

சங்கீதாவுக்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆறு மாதங்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கிறார்கள். அதன் பின்னர் இருவரும் நிரந்தரமாகப் பிரிய முடிவெடுத்ததால், பெற்றோர் சம்மதத்துடன் சங்கீதா இரண்டாவதாக பொன்ராஜை திருமணம் செய்துகொண்டார்.

தன்னைப் பிரிந்த முதல் மனைவி சங்கீதாவுக்கு இரு மாதங்களுக்கு முன்பு மறுமணம் நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கண்ணன் கோபமடைந்திருக்கிறார். தன்னுடன் வாழ மறுத்த சங்கீதா, வேறொரு நபருடன் வாழக் கூடாது எனக் கோபத்தில் முடிவெடுத்த அவர், சங்கீதாவைக் கொலை செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கொலையாகிக் கிடக்கும் சங்கீதா
கொலையாகிக் கிடக்கும் சங்கீதா

அதனால், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு பத்திரிகை கொடுக்கச் செல்வதுபோல வாகைக்குளத்திலிருந்து புறப்பட்டு கல்லூத்து கிராமத்துக்குச் சென்ற கண்ணன், அங்குள்ளவர்களிடம் சங்கீதாவின் வீடு எங்கிருக்கிறது எனக் கேட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சங்கீதாவின் வீட்டைக் கண்டுபிடித்த கண்ணன் அங்கு சென்றபோது பொன்ராஜ் வேலைக்குச் சென்றிருந்தார். அதனால் சங்கீதா மட்டுமே வீட்டில் இருந்திருக்கிறார். வீட்டுக்குள் நுழைந்த கண்ணன், மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை சரமாரியாக வெட்டியிருக்கிறார்.

கொலையான உடல்
கொலையான உடல்

இதைச் சற்றும் எதிர்பார்க்காத சங்கீதா உதவி கேட்டு அலறியிருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வருவதற்குள் கண்ணன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அறிந்ததும் சுரண்டை ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த விஷயங்கள் தெரியவந்தன.

கொலை செய்யப்பட்ட சங்கீதாவின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தப்பியோடிய கொலையாளியான முதல் கணவன் கண்ணனை போலீஸார் தேடிவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு