Published:Updated:

டெல்லி: நள்ளிரவில் சண்டை; வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி! -ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

சித்திரிப்புப் படம்
News
சித்திரிப்புப் படம்

கணவனுடன் சண்டையிட்டுக்கொண்டு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியில் வந்த பெண்ணை, இரண்டு பேர் காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி ஹரி நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் இரவில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. நள்ளிரவு வரை இந்தச் சண்டை நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பெண் அதிகாலை 2:30 மணிக்கு, கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார். அவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக கார் ஒன்று வந்தது. பெண் தனியாக நடந்து செல்வதைப் பார்த்த காரில் இருந்தவர்கள், காரை நிறுத்தி எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். அந்தப் பெண்ணும் தன்னை அருகில் இருக்கும் ஓர் இடத்தைச் சொல்லி இறக்கிவிட்டுவிடும்படி கூறினார்.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி
மாதிரிப் படம்

அப்போது காரில் இரண்டு பேர் இருந்தனர். காரில் ஏற்றியவர்கள் ஓடும் காரிலேயே அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர் காரில் ஏறிய இடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள நிஹல் விகார் பகுதியில் காரிலிருந்து கீழே இறக்கிவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். உடனே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் காரில் வந்த இரண்டு பேர் எந்த இடத்திலிருந்து லிஃப்ட் கொடுத்தனர் என்ற விவரத்தைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்தது எந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது என்பது குறித்து போலீஸார் இடையே மாறுபட்ட கருத்துகள் ஏற்பட்டன. இறுதியில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்ட பிறகு ஹரி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா உதவியுடன் சம்பந்தப்பட்ட பெண் ஏறிய கார் நம்பரை போலீஸார் கண்டுபிடித்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

கார் எண் பதிவு செய்யப்பட்டிருந்த முகவரிக்குச் சென்றபோது அங்கு ஒரு பெண் வசித்துவந்திருக்கிறார். அவரிடம் விசாரித்தபோது, காரை தனது உறவினர் வினித் என்பவர் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். உடனே வினித்தைப் பிடித்து விசாரித்தபோது அவரும், அவரின் நண்பர் சாகர் என்பவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. சாகரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துவிட்டு மது அருந்திவிட்டு வரும்போது இக்காரியத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டனர். டெல்லியில் கடந்த ஜனவரியிலிருந்து நவம்பர் வரை 1,845 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான வன்கொடுமைச் சம்பவங்கள் உறவினர்கள், நண்பர்களால் நடப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.