Published:Updated:

நகைக் கடை உரிமையாளர் மீது மிளகாய்பொடி தூவிய பெண்! - கொள்ளை முயற்சியில் சிக்கிய கணவன், மனைவி

நகைக் கடை
நகைக் கடை

சிசிடிவி-யை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், வணிக நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய மற்ற ஊழியர்களும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவாரூரில் இயங்கிவரும் ஒரு நகைக் கடைக்குள் புகுந்த பெண் ஒருவர், கடை உரிமையாளர் மீது மிளகாய்பொடியைத் தூவி நகைகளைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம், அந்தப் பகுதி வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ள காவல்துறையினர், ``வணிகர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

நகைக் கடை
நகைக் கடை

திருவாரூர், அலிவலம் சாலையில் நகைக் கடை நடத்திவருபவர் கிரண்குமார். இவர், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த பல ஆண்டுகளாக திருவாரூரில் வசித்துவருகிறார். இவரது நகைக் கடைக்கு பர்தா அணிந்து வந்த இளம்பெண் ஒருவர், ஒரு பவுன் அளவில் செயின் வேண்டும் என கிரண்குமாரிடம் கேட்டிருக்கிறார். விதவிதமன டிசைன்களில் ஒரு பவுன் செயின்களை எடுத்து கிரண்குமார் காண்பித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.

டிசைன் பிடிக்கவில்லை எனச் சொல்லி, தொடர்ச்சியாக வேறு செயின்களைக் காட்டச் சொல்லி அவரது கவனத்தை திசைதிருப்பிய அந்த இளம்பெண், நகைக் கடை உரிமையாளர் கிரண்குமார் முகத்தில் திடீரென மிளகாய்பொடியைத் தூவியிருக்கிறார். கண் எரிச்சல் அடைந்து, கிரண்குமார் சற்று நிலை தடுமாறிய நிலையில், அங்கிருந்த ஐந்து பவுன் எடைகொண்ட தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு கடைக்கு வெளியே ஓடியிருக்கிறார். அங்கு ஏற்கெனவே காத்திருந்த மர்ம நபருடன், இவர் தப்பியோட முயன்றிருக்கிறார்.

வியாபாரியிடம் 10 லட்ச ரூபாய் வழிப்பறி; மதுரை இன்ஸ்பெக்டர் கோத்தகிரியில் கைது!

நகைக் கடைக்குள்ளிருந்து, கூச்சல் எழுப்பியவாறே கிரண்குமார் வெளியில் ஓடி வந்ததால், அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள் அங்கு கூடிவிட்டார்கள். நகையைத் திருடிச் சென்ற அந்த இளம்பெண்ணைப் பிடித்து திருவாரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவருக்குத் துணையாக வந்த மர்ம நபரும் கைதுசெய்யப்பட்டார். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், நகையைத் திருடிய பெண், திருவாரூர் அருகேயுள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியைச் சேர்ந்த, 35 வயதான கவிதா என்பதும், அவருக்கு துணையாக வந்த மர்ம நபர், கவிதாவின் கணவரான ஆட்டோ டிரைவர் கணேசன் (40) என்பதும் தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

இதையடுத்து திருவாரூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து கணேசன்-கவிதா தம்பதியரைக் கைதுசெய்தனர். மேலும் கணேசனிடமிருந்து ஐந்து பவுன் நகைகளை மீட்டனர். கடைவீதி பகுதியில் அமைந்துள்ள நகைக் கடையில், அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் திருவாரூர் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக எச்சரிக்கை செய்திருக்கும் காவல்துறையினர், ``தவறான நோக்கத்துடன் வணிக நிறுவனங்களுக்குள் வரக்கூடிய மர்ம நபர்கள், கடை உரிமையாளர்களின் கவனத்தை திசைதிருப்ப, விதவிதமான நூதன முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். சிசிடிவி கேமராவை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், வணிக நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய மற்ற ஊழியர்களும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, நகைக் கடைகளில், உரிமையாளர் மட்டுமல்லாமல், இயன்ற வரை அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களும் பணியில் இருக்க வேண்டும்’’ என அறிவுறுத்துகிறார்கள்.

தஞ்சாவூர்: திருட்டு வழக்கு; காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்ம மரணம்! - உயரதிகாரிகள் விசாரணை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு