Published:Updated:

காதலனுக்குக் கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்த கிரீஷ்மா - கிருமிநாசினி குடித்து தற்கொலை முயற்சி

கிரீஷ்மா - ஷாரோன் ராஜ்

`கிரீஷ்மா பயன்படுத்த ஒரு பாத்ரூமைச் சோதனை செய்து தயாராக வைத்திருந்தோம். ஆனால், பெண் போலீஸார் வேறு பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றதுதான் இந்தச் சம்பவம் நடைபெறக் காரணமாக ஆகிவிட்டது' என்றார் எஸ்.பி ஷில்பா.

காதலனுக்குக் கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்த கிரீஷ்மா - கிருமிநாசினி குடித்து தற்கொலை முயற்சி

`கிரீஷ்மா பயன்படுத்த ஒரு பாத்ரூமைச் சோதனை செய்து தயாராக வைத்திருந்தோம். ஆனால், பெண் போலீஸார் வேறு பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றதுதான் இந்தச் சம்பவம் நடைபெறக் காரணமாக ஆகிவிட்டது' என்றார் எஸ்.பி ஷில்பா.

Published:Updated:
கிரீஷ்மா - ஷாரோன் ராஜ்

திருவனந்தபுரம் மாவட்டம், பாறசாலையைச் சேர்ந்த பி.எஸ்சி மாணவன் ஷாரோன் ராஜ்( 23) கடந்த 14-ம் தேதி காதலியான களியக்காவிளை ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) வீட்டுக்குச் சென்றார். தனது வீட்டில் வைத்து ஷாரோன் ராஜுக்கு விஷம் கலந்த கஷாயம் கொடுத்திருக்கிறார் கிரீஷ்மா. அதன் பின்னர் உடல்நிலை மோசமான ஷாரோன் ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 25-ம் தேதி மரணமடைந்தார். நேற்று க்ரைம் பிராஞ்ச் போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த பிப்ரவரி மாதம் கிரீஷ்மாவுக்கு வேறு திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால், காதலித்தபோது எடுத்த போட்டோ மற்றும் வீடியோக்களை டெலிட் செய்யாமல் ஷாரோன் ராஜ் வைத்திருந்ததார். அதைத் தன் வருங்கால கணவருக்கு ஷாரோன் ராஜ் அனுப்பிவிடுவார் என பயந்த கிரீஷ்மா திட்டமிட்டு, வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். இந்தக் கொலைக்கு உடந்தையாக வேறு சிலர் இருந்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தற்கொலைக்கு முயன்ற கிரீஷ்மா, கொலைசெய்யப்பட்ட ஷாரோன் ராஜ்
தற்கொலைக்கு முயன்ற கிரீஷ்மா, கொலைசெய்யப்பட்ட ஷாரோன் ராஜ்

ஷாரோன் ராஜுக்கு கஷாயத்தில் விஷம்வைத்து கொலை செய்த தகவலை அடுத்து கிரீஷ்மாவின் வீட்டில் நேற்று இரவு சிலர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் கிரீஷ்மாவை இன்று காலை 11:30 மணி அளவில் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் செல்ல குற்றப்பிரிவு போலீஸார் முடிவுசெய்திருந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நெடுமங்காட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் வழியில் கிரீஷ்மா திடீரென வாந்தி எடுத்தார். அது பற்றி போலீஸார் கேட்டதற்கு ஏற்கெனவே விசாரணை நடந்த காவல் நிலைய கழிவறைக்குச் சென்றபோது அங்கிருந்த கிருமிநாசினி லோஷனைக் குடித்ததாகக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து கிரீஷ்மா திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி ஷில்பா கூறுகையில், "கிரீஷ்மாவை மருத்துவமனையிலிருந்து எப்போது டிஸ்சார்ஜ் செய்வார்கள் என இன்னும் மருத்துவர்கள் சொல்லவில்லை. மாஜிஸ்ட்ரேட்டை மருத்துவமனைக்கு வரவழைத்து முறைப்படி கைது நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்திருக்கிறோம். பெண் எஸ்.ஐ உள்ளிட்ட நான்லி பெண் போலீஸார் கிரீஷ்மாவின் பாதுகாப்புக்கு இருந்தனர். கிரீஷ்மா பயன்படுத்த ஒரு பாத்ரூமைச் சோதனை செய்து தயாராக வைத்திருந்தோம். ஆனால், பெண் போலீஸார் வேறு பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றதுதான் இந்தச் சம்பவம் நடைபெற காரணமாக ஆகிவிட்டது. கவனக்குறைவாக இருந்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரது உடல்நிலை சீரான பிறகு விசாரணை தொடரும்" என்றார்.

எஸ்.பி ஷில்பா
எஸ்.பி ஷில்பா

ஷாரோன் ராஜ் கொலையில் கிரீஷ்மா மட்டும் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், உறவினர் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதனால் கிரீஷ்மா, அவரின் பெற்றோர், உறவினர் உள்ளிட்டவர்களை சேர்த்து அமரவைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்திருக்கிறது க்ரைம் பிராஞ்ச் போலீஸ்.