Published:Updated:

நெல்லையில் தொடரும் நிதிநிறுவன மோசடி... மீண்டும் ஏமாந்த அப்பாவி மக்கள்!

பி.ஆண்டனிராஜ்
நெல்லையில் தொடரும் நிதிநிறுவன மோசடி... மீண்டும் ஏமாந்த அப்பாவி மக்கள்!
நெல்லையில் தொடரும் நிதிநிறுவன மோசடி... மீண்டும் ஏமாந்த அப்பாவி மக்கள்!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நிதிநிறுவனம் நடத்தி, 40 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. சிறிது சிறிதாகச் சேர்ந்த பணத்தை நிதிநிறுவன மோசடி மூலமாக ஏமாற்றம் அடைந்ததால் அதிருப்தி அடைந்த நெல்லை மாவட்ட அப்பாவி மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். 

நெல்லையில் தொடரும் நிதிநிறுவன மோசடி... மீண்டும் ஏமாந்த அப்பாவி மக்கள்!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, ரியல் பிலிஸ் ஆக்ரோ ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டுவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் மட்டும் அல்லாமல், அருகில் உள்ள நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில், திருவேங்கடம், குருவிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களிடமும் பணம் வசூல்செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிதி நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதாக அறிவித்ததால், அதற்கு ஆசைப்பட்டு ஏராளமானோர் ஆர்வத்துடன் பணம் செலுத்தியுள்ளனர். மாதந்தோறும் 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஐந்து வருடங்களுக்குச் செலுத்தினால், அதிக வட்டி கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு லட்சம் முதல் ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்வதற்கான திட்டத்தையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதற்கு ஆசைப்பட்ட அப்பாவி மக்கள், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். குறிப்பாக, தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள், கூலித் தொழிலாளர்கள் எனப் பலரும் அதிகமாக முதலீடுசெய்துள்ளனர். ஏராளமானோர், பணத்தை மாதாந்தரச் சீட்டுத் தொகைபோல செலுத்திவந்துள்ளனர். 

நெல்லையில் தொடரும் நிதிநிறுவன மோசடி... மீண்டும் ஏமாந்த அப்பாவி மக்கள்!

 5 ஆண்டுகாலம் முதிர்ச்சியடைந்த நிலையில், அந்த நிறுவனத்துக்குச் சென்று பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். ஆனால், பயனாளிகளுக்கு எந்தத் தொகையும் திருப்பித் தரப்படவில்லை. அத்துடன்,சில மாதங்களுக்கு முன்பு, அந்த நிறுவனத்தின் அலுவலகம் பூட்டப்பட்டுவிட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். 

அவர்கள் அளித்த மனுவில், தங்களை ஏமாற்றி பணத்தைச் சுருட்டிய நிறுவனத்தினரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக் கோரியிருந்தனர். அந்த நிதி நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்கள். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மணிமேகலை என்பவர் கூறுகையில், ‘’அதிக வட்டி கொடுப்போம் என அந்த நிறுவனத்தின் ஏஜெண்டுகள் சொன்னதை நம்பி பணம் செலுத்தினேன். 

நெல்லையில் தொடரும் நிதிநிறுவன மோசடி... மீண்டும் ஏமாந்த அப்பாவி மக்கள்!

ஐந்து வருடங்கள் முடிந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று விவரம் கேட்டபோது, முறையாகப் பதில் சொல்லவில்லை. இப்போது, நிறுவனத்தை மூடிவிட்டு சென்றுவிட்டனர். இந்த நிறுவனத்தின்மூலம் எங்கள் பகுதியில் மட்டும் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கிறது. வருமானத்தை எல்லாம் இந்த நிறுவனத்தை நம்பி கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறேன்’’ என்று வேதனைப்பட்டார். 

Vikatan