Published:Updated:

`போனிலும் நேரிலும் தொடர்ந்து தொல்லை!'- ஒருதலைக் காதலால் இன்ஜினீயரிங் மாணவிக்கு நடந்த கொடுமை

சி.ய.ஆனந்தகுமார்
`போனிலும் நேரிலும் தொடர்ந்து தொல்லை!'- ஒருதலைக் காதலால் இன்ஜினீயரிங் மாணவிக்கு நடந்த கொடுமை
`போனிலும் நேரிலும் தொடர்ந்து தொல்லை!'- ஒருதலைக் காதலால் இன்ஜினீயரிங் மாணவிக்கு நடந்த கொடுமை
திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒருதலை காதலால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
`போனிலும் நேரிலும் தொடர்ந்து தொல்லை!'- ஒருதலைக் காதலால் இன்ஜினீயரிங் மாணவிக்கு நடந்த கொடுமை
திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் புதிய தமிழகம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு நிர்வாகியாகவும் பதவி வகிக்கிறார். இவரது மகள் மலர்விழி மீரா என்பவர் எம்.எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அந்தப் பெண்ணை அவரது வீட்டிற்கு அருகில் குடியிருந்து வரும் முரளி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
முரளிக்கு திருமணமாகி ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருந்து வந்த நிலையில், அவரிடம் பேசுவதையே மீரா தவிர்த்து வந்ததாக தெரிகிறது. சென்னையில் பணியாற்றி வந்த முரளி, மீராவிற்கு தொலைபேசியிலும் நேரிலும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே மீரா, முரளியின் ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த முரளி அவரை தீர்த்துக்கட்ட திட்டம்  தீட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலையில் கல்லூரி சென்ற மீரா பேருந்திலிருந்து திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே இறங்கியவர், அங்கிருந்து வீட்டிற்குச் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரைப் பின் தொடர்ந்த முரளி ஆவேசமாக பாய்ந்து கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த மீரா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மீரா பரிதாபமாக உயிரிழந்தார். கத்தியால் குத்திய முரளியை பொதுமக்கள் தாக்கியதால் அவருக்கும் காயம் ஏற்பட்டதால், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
`போனிலும் நேரிலும் தொடர்ந்து தொல்லை!'- ஒருதலைக் காதலால் இன்ஜினீயரிங் மாணவிக்கு நடந்த கொடுமை
மீரா கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்த சம்பவம் குறித்து தகவலறிந்த புதிய தமிழகம் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் இரவு முழுவதும் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவியது. இதையடுத்து தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் நிஷா மற்றும் உதவி காவல் ஆணையர்கள் ராமச்சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் இரவு முழுவதும் திருச்சி மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்நிலையில் இறந்துபோன மீராவின் உடல், திருச்சி அரசு மருத்துவர்களால் பிரேத சோதனை செய்யப்படுகிறது. ஒருதலை காதலால் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan