Published:Updated:

`பெண்களைத் தவறாகப் பார்க்கிற எந்த ஆணின் மனதையும் சிசிடிவி தடுக்காது!'- கொதிக்கும் வானதி

சத்யா கோபாலன்
`பெண்களைத் தவறாகப் பார்க்கிற எந்த ஆணின் மனதையும் சிசிடிவி தடுக்காது!'- கொதிக்கும் வானதி
`பெண்களைத் தவறாகப் பார்க்கிற எந்த ஆணின் மனதையும் சிசிடிவி தடுக்காது!'- கொதிக்கும் வானதி

2016 ஜூன் 24-ம் தேதி காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த ஸ்வாதி என்ற இளம் பெண், இளைஞர் ஒருவரால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஸ்வாதியைக் கொலை செய்த நபர் யார் எனத் தெரியாமல் நீண்ட நாள்களாக போலீஸார் திணறி வந்தனர். கொலையாளி அடையாளம் காணப்படாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி இல்லை என்பதுதான். இதையடுத்து ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு பின்னர் அவரும் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

`பெண்களைத் தவறாகப் பார்க்கிற எந்த ஆணின் மனதையும் சிசிடிவி தடுக்காது!'- கொதிக்கும் வானதி

இது இப்படியிருக்க இதே போன்ற மற்றொரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. நேற்று மாலை சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி என்ற பெண்ணுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுரேந்தர் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் உச்சத்தை அடையவே, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தேன்மொழியைத் தாக்கியுள்ளார். இதில் தேன்மொழிக்கு இடப்பக்க தாடையில் வெட்டு விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.

`பெண்களைத் தவறாகப் பார்க்கிற எந்த ஆணின் மனதையும் சிசிடிவி தடுக்காது!'- கொதிக்கும் வானதி

தொடர்ந்து, தேன்மொழியைத் தாக்கிய சுரேந்தரும் அங்கு வந்த மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் சுரேந்தருக்கும் பலத்த அடிப்பட்டுள்ளது. தற்போது தேன்மொழி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சுரேந்தர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேன்மொழிக்கும், சுரேந்தருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததா, அவர்களுக்குள் என்ன பிரச்னை என்ற எந்தத் தகவலும் முழுதாக தெரியவில்லை. இதை அறிந்துகொள்ள முயலும் போதுதான் தெரிந்துள்ளது சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலும் சிசிடிவி கேமிரா இல்லையாம். 

ஸ்வாதி கொலைச் சம்பவம் நடந்தும் இன்னும் பல ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவி வருவதாகப் பெண் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். 

`பெண்களைத் தவறாகப் பார்க்கிற எந்த ஆணின் மனதையும் சிசிடிவி தடுக்காது!'- கொதிக்கும் வானதி

இந்தச் சம்பவம் பற்றி நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், ``சமூகத்தை உலுக்கும் ஒவ்வொரு சம்பவமும் நடைபெறும் போதும் சட்டத்தை இயற்றும் இடத்தில் உள்ள தலைவர்கள் புதுப் புது சட்டத்தைக் கொடுத்துக்கொண்டுதான் உள்ளனர். இன்னொரு பக்கம் பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். ஆசிட் வீச்சு, கொலை போன்ற சம்பவங்கள் மிகச் சாதாரணமாக நடந்து வருகிறது. யாருக்கும் சட்டத்தின் மீதான பயம் போய்விட்டது. இதுமட்டுமல்லாமல், ஆண் பெண் உறவு மற்றும் பெண்களின் மீதான ஆண்களின் பார்வை இவற்றைப் பற்றி சிறு வயதிலிருந்து இரண்டு குழந்தைகளுக்கும் சொல்லி வளர்க்க வேண்டும். 

ஒருவரை ஒருவர் மாறி மாறிக் குற்றம்சாட்டுவது இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வாகாது. குடும்பத்தில் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அத்தனை தரப்பும் முயற்சி எடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்ற சம்பவங்கள் குறையும். மேலும் பாதிக்கப்பட்ட பெண், அதன் பிறகு வெளியில் வரமுடியாமல் இந்தச் சமுதாயம் அவளை விளம்பரம் செய்கிறது. அதையும் மாற்ற வேண்டும். 

`பெண்களைத் தவறாகப் பார்க்கிற எந்த ஆணின் மனதையும் சிசிடிவி தடுக்காது!'- கொதிக்கும் வானதி

சி.சி.டி.வி கேமரா குற்றவாளிகளை அடையாளம் காண மட்டுமே பயன்படுகிறது. பெண்களைத் தவறாகப் பார்க்கிற, தாக்குதல் நடத்துகிற எந்த ஆணின் மனதையும் சி.சி.டி.வி தடுக்காது. அனைத்துத் துறைகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு அந்தத் துறையை மேம்படுத்த தனியாக நிறைய நிதி ஒதுக்கப்படுகிறது. அவர்கள் அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசின் உதவியும் உள்ளது. 

இதுமட்டுமல்லாமல் பெண்களின் பாதுகாப்புக்காக ‘நிர்பயா நிதியுதவி’ என்பதை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. அதை அந்தந்த துறைகள், அரசு, அமைப்புகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எத்தனையோ மாநிலங்களில் நிர்பயா நிதி செலவழிக்காமல் திருப்பி மத்திய அரசுக்கே அனுப்பப்படுகிறது. அவற்றை வைத்து அந்தத் துறைகளைச் சேர்ந்தவர்கள் நினைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமுடியும். நம் குழந்தை வளர்ப்பில் தொடங்கி சமுதாயத்தில் உள்ள அனைத்து நபர்களும் இதில் பங்கு உள்ளது” எனத் தெரிவித்தார். 

Vikatan