Published:Updated:

`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்!' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி

மு.இராகவன்
`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்!' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி
`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்!' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி

மயிலாடுதுறை அருகே கூலித்தொழிலாளி முரளி என்பவர் மர்ம நபர்களால் கொலையான சம்பவத்தில் மனைவி மற்றும் அவரின் நண்பரிடம் சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்!' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி

நாகை மாவட்டம், குத்தாலத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் இரண்டாவது மனைவியின் மகளான திவ்யாவுக்கும் தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த முரளிக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் முரளியின் உறவினர் சுரேஷ் என்பவருடன் திவ்யாவுக்குத் தொடர்பு ஏற்படவே இருவரும் கொஞ்ச நாள்கள் சென்னையில் வசித்துள்ளனர். மீண்டும் குடும்பப் பஞ்சாயத்தில் ஒன்று சேர்ந்து முரளி மனைவியுடன் குத்தாலத்தில் வசித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்றிரவு குடிப்பதற்கு மனைவியிடம் பணம் வாங்கிச் சென்ற முரளி பைரவா நகர் அருகே உடைந்து சிதறிக்கிடந்த மதுபாட்டில்கள் நடுவே ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். முரளியின் உடலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த குத்தாலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் மனைவி திவ்யா, திவ்யாவின் தொடர்பில் இருந்த சுரேஷ் மற்றும் திவ்யாவின் தம்பி செல்வகணபதி ஆகியோரைப் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். தனக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியே ஆட்களை ஏவி கொலைசெய்துவிட்டதாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.