Published:Updated:

`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்!' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

ராம் பிரசாத்
`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்!' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்!' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்!' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் 15 வயது சிறுமியை தந்தையும் சகோதரனும் கால்வாயில் தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கால்வாயில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி செல்லும் சிறுமியைத் திருமணம் செய்துகொள்ள குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். தான் படிக்க விரும்புவதாகவும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனக் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோரின் தொந்தரவு தாங்காமல் தன் சகோதரியின் இல்லத்தில் இருந்துள்ளார். அங்கிருந்து கட்டாயப்படுத்தி தன் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்தான் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

மருத்துவமனையில் சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்தில், “அப்பா என்னை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் என் சகோதரனும் அங்கே வந்தார். என் சகோதரன் ஒரு துணியைக் கொண்டு என் கழுத்தை இறுக்கினான். பின்னால் இருந்த என் தந்தை கத்தியால் என்னைச் சரமாரியாகத் தாக்கினர். என்னை விட்டுவிடுமாறு அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால், அவர்கள் என்னைக் கடுமையாகத் தாக்கினர். அவர்கள் கொலை செய்யும் முடிவை கைவிடவில்லை. இருவரும் என்னை அந்தக் கால்வாயில் தூக்கி வீசினர். நான் உயிரோடு இருக்கிறேனா இல்லை இறந்துவிட்டேனே என்பதை உறுதிசெய்துகொள்ள என் தந்தை சிறிது நேரம் கழித்து வந்து அந்த இடத்தைப் பார்வையிட்டார். நான் தண்ணீரில் சிறிது தூரம் நீந்திச் சென்றுவிட்டதால் அவரால் என்னைப் பார்க்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.  

`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்!' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

சிறுமியின் மாமா கூறுகையில், ``நான் அவளின் அக்கா கணவர். கடந்த இரண்டு மாதங்களாக இங்குதான் இருந்தாள். குடும்பத்தினர் படிப்பை தொடர அனுமதிக்கவில்லை. அவளுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினர். கடந்த சில நாள்களுக்கு முன்பாக அழைத்துச் சென்றனர். ஆனால், இன்று கால்வாய் அருகே மீட்டதாக எனக்குப் போன் வந்தது” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி கூறுகையில், “சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். எல்லா கோணங்களில் இந்த வழக்கை ஆராய்ந்து வருகிறோம். இந்த விவகாரத்தில் ஆதாரத்தின் அடிப்படையில் சிறுமியின் தந்தை மற்றும் சகோதரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Vikatan