Published:Updated:

லட்சத்தைப் பார்த்ததும் மனமாறிய மகாலட்சுமி! - பாராட்டப்பட வேண்டியவர் சிறையில் இருக்கிறார்!

எஸ்.மகேஷ்
லட்சத்தைப் பார்த்ததும் மனமாறிய மகாலட்சுமி! - பாராட்டப்பட வேண்டியவர் சிறையில் இருக்கிறார்!
லட்சத்தைப் பார்த்ததும் மனமாறிய மகாலட்சுமி! - பாராட்டப்பட வேண்டியவர் சிறையில் இருக்கிறார்!

சென்னை தேனாம்பேட்டையில் பழைய துணி மூட்டையில் இருந்த 11.5 லட்சம் ரூபாயைப் பார்த்ததும் மனம்மாறிய மகாலட்சுமி, அந்தப்பணத்தில் கடன்களைத் திரும்பக் கொடுத்துள்ளார். ஒரே நாளில் 47,000 ரூபாயை அவர் செலவழித்துள்ளார். 

லட்சத்தைப் பார்த்ததும் மனமாறிய மகாலட்சுமி! - பாராட்டப்பட வேண்டியவர் சிறையில் இருக்கிறார்!

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி சுசிலா. இவர்களின் மகன் கணேசன். கல்லூரியில் படிக்கிறார். கடந்த 13-ம் தேதி ரவியின் வீட்டிலிருந்து பழைய துணிகளை வாங்கிச் சென்றார் செங்குன்றத்தைச் சேர்ந்த மகாலட்சுமி. திருடனுக்குப் பயந்து பழைய துணியில் வைத்திருந்த 11.5 லட்சம் ரூபாயும் மகாலட்சுமி எடுத்துச் சென்ற துணி மூட்டையோடு போய்விட்டது. இதனால் சுசிலாவும் அவரின் குடும்பத்தினரும் பதறிப்போனார்கள். சுசிலா கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், தலைமைக் காவலர் பொன்வேல் ஆகியோர் விசாரணை நடத்தி மகாலட்சுமியைக் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பழைய துணி மூட்டைகளை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மகாலட்சுமி, அதை பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது, துணிகளோடு 2000, 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. பணத்தைப் பார்த்ததும் அவரின் மனம் மாறியுள்ளது. பணத்தை அவர் எண்ணியபோது அதில் 11.5 லட்சம் ரூபாய் இருந்தது. மகாலட்சுமிக்கு கணவர் இல்லை. இதனால் அவர்தான் குடும்பத்தைக் கஷ்டப்பட்டு நடத்திவந்தார். இதையடுத்து, அந்தப் பணத்தை மகாலட்சுமி செலவழிக்கத் தொடங்கியுள்ளார். கடனாக வாங்கிய பணத்தை திரும்ப மகாலட்சுமி கொடுத்துள்ளார். மேலும், அந்தப் பணத்தில் சில பொருள்களை அவர் வாங்கியுள்ளார். ஒரே நாளில் அவர் 47,000 ரூபாயை செலவழித்துள்ளார். 

லட்சத்தைப் பார்த்ததும் மனமாறிய மகாலட்சுமி! - பாராட்டப்பட வேண்டியவர் சிறையில் இருக்கிறார்!

சுசிலா வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மகாலட்சுமியின் முகவரியைக் கண்டறிந்து அவரிடம் விசாரித்தோம். முதலில் அவர் பணமா என்று எங்களிடமே கேள்வி கேட்டார். அதன்பிறகு அவரிடம் விசாரித்தபோது பணம் இருந்ததை ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து 11 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம். சுசிலா வீட்டில் உள்ள பழைய துணிகளோடு பணம் இருந்ததைப் பார்த்த மகாலட்சுமி அதை திரும்பக் கொடுத்திருந்தால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டோம். ஆனால், அவர் அந்தப் பணத்தை ஏமாற்றியதற்காக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளோம்" என்றனர். 

புகார் கொடுத்த சுசிலா கூறுகையில், ``நாங்கள் தற்போது குடியிருக்கும் வீட்டை இடிக்க உள்ளனர். இதனால் துரைப்பாக்கம் கல்லுக்குட்டை பகுதியில் புதிய வீடு வாங்க திட்டமிட்டோம். அந்த வீட்டின் விலை 12 லட்சம் ரூபாய். எங்களிடம் 11.5 லட்சம் ரூபாய்தான் இருந்தது. மீதமுள்ள 50,000 ரூபாயை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்துக்கொண்டிருந்தோம். 

லட்சத்தைப் பார்த்ததும் மனமாறிய மகாலட்சுமி! - பாராட்டப்பட வேண்டியவர் சிறையில் இருக்கிறார்!

என் கணவர் ரவி, ஆட்டோ ஓட்டுவார். மேலும், கிடைக்கிற வேலைகளைச் செய்வார். நானும் அவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இது. திருடனுக்குப் பயந்துதான் பழைய துணியில் 11.5 லட்சம் ரூபாயை வைத்திருந்தேன். அந்தப் பணத்தைத்தான் தெரியாமல் என் மகன் கணேசன் ஆசிரமத்துக்கு துணி கேட்டவுடன் எடுத்துக் கொடுத்துவிட்டான். உண்மையாக நாங்கள் உழைத்த பணம் என்பதால் திரும்ப எங்களிடமே வந்துவிட்டது. பழைய துணியில் பணத்தைப் பார்த்ததும் அந்தப் பெண் எங்களிடம் கொடுத்திருந்தால் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். பணத்தைப் பார்த்ததும் அவரின் மனம் மாறியதால் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றார். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,`` சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழைய துணிகளை ஆசிரமம், அநாதை இல்லத்துக்கு கேட்டு வருவது வாடிக்கையானது. அதில் சிலர் பழைய துணிகளை ஆசிரமத்துக்கும் அநாதை இல்லத்துக்கும் கொடுக்காமல் விலைக்கு விற்றுவிடுகின்றனர். மகாலட்சுமி விநியோகித்த நோட்டீஸில் அம்மா ஆசிரமத்தின் முகவரி இருந்தது. அது தொடர்பாக விசாரித்தபோது அது போலி என்று தெரியவந்துள்ளது. மகாலட்சுமி பழைய துணிகளை வாங்கி அரவிந்தன் என்பவரிடம் கொடுப்பதாக எங்களிடம் கூறியுள்ளார். அரவிந்தன், பத்திரிகையாளர் என்ற தகவல் கிடைத்துள்ளது

லட்சத்தைப் பார்த்ததும் மனமாறிய மகாலட்சுமி! - பாராட்டப்பட வேண்டியவர் சிறையில் இருக்கிறார்!

அவரின் வாட்ஸ்அப் டி.பி-யில் போலீஸ் கமிஷனருடன் அவர் இருக்கும் புகைப்படம் உள்ளது. அரவிந்தனிடமும் விசாரணை நடத்தவுள்ளோம். மகாலட்சுமியைப் பொறுத்தவரை பழைய துணி மூட்டையில் பணத்தைப் பார்த்ததும் அவர் எங்களிடமாவது அல்லது சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை திரும்பக் கொடுத்திருந்தால் இன்று அவர் பாராட்டப்பட்டிருப்பார். ஆனால், லட்ச ரூபாயை பார்த்ததும் அவரின் மனம்மாறி அதை செலவழித்ததால் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றார். 

ஆசிரமம், அநாதை இல்லம் ஆகியவற்றுக்கு இலவசமாக பழைய துணிகளை வாங்கிச் செல்பவர்கள் இத்தகைய மோசடியில் ஈடுபடுவது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மோசடிக் கும்பல் பழைய துணிகளை விற்பதன் மூலம் தினமும் 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கென தனி நெட்வொர்க் ஒன்று செயல்படுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.