Published:Updated:

`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்!'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி

ஜி.சதாசிவம்
`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்!'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி
`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்!'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி

நெய்வேலியில் கஞ்சா வியாபாரி ஒருவர் கஞ்சா விற்பதாகவும், தன் மீது 28 வழக்குகள் உள்ளன, முடிந்தால் காவல்துறை கைது செய்யட்டும் எனச் சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

`என்மீது 28 வழக்கு இருக்கு; ஒருவரை கொல்லப்போறேன்!'- போலீஸுக்கு சவால்விடும் கஞ்சா வியாபாரி

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் மந்தாரக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. போலீஸார் கஞ்சா விற்பனையைத் தடுக்க பல முயற்சிகள் எடுத்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர், `நான் பெங்களூர் மணி பேசுகிறேன். என் மீது 307 உட்பட 28 வழக்குகள் இருக்கின்றன. தற்பொழுது நெய்வேலியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறேன். இதைத் தடுக்க நினைக்கும் காவல் துறை நண்பன் ஒருவரைக் கொலை செய்யப் போகிறேன். என்னிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளும் உள்ளன. என்னைக் கைது செய்ய முடிந்தால் காவல் துறையினர் கைது செய்யட்டும்'' எனச் சவால்விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதில் கஞ்சா விற்பவர், கஞ்சா பயன்படுத்துபவர் என அனைவரும் சேர்ந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையில் கேட்டதற்கு, ``இது பழைய வீடியோ. 4 மாதத்துக்கு முன்பு வெளிவந்தது. அது இப்பொழுது ஏன் வெளியிடப்படுகிறது என்பது தெரியவில்லை. பெங்களூர் மணி என்பவருக்கு சொந்த ஊர் பெங்களூர். மந்தாரக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அப்பொழுது வரும்போது கஞ்சா எடுத்து வந்து நண்பர்களுக்குக் கொடுப்பதும், விற்பனை செய்வதும் உண்டு. போலீஸார் பிடிக்கச் சென்றால் தன் உடலில் பிளேடால் பல இடங்களில் கீறிக்கொள்வார். அவர் உடலில் வரும் ரத்தத்தைப் பார்த்து போலீஸார் பயந்து வந்துவிடுவார்கள். கடந்த 4 மாதம் முன்பு மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் நடந்த ஒரு அடிதடி வழக்கில்  மணி கைது செய்யப்பட்டார். அப்பொழுது வெளியிட்ட வீடியோ இது. இருந்தாலும் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர். 

Vikatan