Published:Updated:

``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்!’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்

இ.கார்த்திகேயன்
``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்!’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்
``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்!’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்

கணவரை வேலைக்குப் போகச் சொல்லி நடந்த தகராறில் கர்ப்பமான மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துவிட்டு கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்!’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ளது சத்திரப்பட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கட்டடக் கொத்தனார் வேலை செய்து வந்த மாரியப்பனுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி கோவில்பட்டியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது சண்முகப்பிரியா கர்ப்பமாக இருந்தார். இன்று காலையில் வெகுநேரமாகியும் மாரியப்பனின் வீடு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. மாரியப்பனின் வீட்டின் அருகில் வசித்துவரும் அவரின் சகோதரி காளியம்மாள் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். வீடு உட்புறமாகப் பூட்டி இருந்துள்ளது.

பலமுறை கதவைத் தட்டிப் பார்த்தும் எந்தப் பதிலும் இல்லாததால், வீட்டின் ஜன்னல் கதவை உடைத்துப் பார்த்துள்ளார். அப்போது மாரியப்பனும் சண்முகப்பிரியா இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் முதல் அறையில் அரை மயக்கத்தில் கை, கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மாரியப்பன் கிடந்துள்ளார். இரண்டாவதாக உள்ள படுக்கை அறையில் சண்முகப்பிரியா ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த மாரியப்பனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ``என் மனைவி என்னை வேலைக்குப் போகச் சொல்லி தொந்தரவு கொடுத்து வந்தார். நேற்று இரவிலும் இதே பிரச்னை சம்பந்தமாகச் சண்டை போட்டோம். அந்தத் தகராறில் பழங்கள் வெட்ட வைத்திருந்த கத்தியால் மனைவி சண்முகப்பிரியாவைக் குத்திக் கொலை செய்தேன். ஆத்திரத்தில் குத்தியதில் அவள் இறந்துபோனதும் ரொம்ப அழுதேன். என்ன செய்வதுன்னு தெரியாமல் நானும் கத்தியால் கையிலும் கழுத்திலும் கீறினேன். கொஞ்ச நேரத்துல மயக்கமடைஞ்சுட்டேன்'' என்று கூறியுள்ளார்.

``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்!’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்

``மாரியப்பனுக்கு அம்மா, அப்பா கிடையாது. அதனால எந்தப் பொறுப்பும் இல்லாம அவன் இஷ்டத்துக்கு இருந்தான். அவனோட அக்காதான் அவனைப் பார்த்துட்டு வந்தா. கட்டடக் கொத்தனார் வேலைக்குப் போவான். ஆனா, ஒழுங்கா போக மாட்டான். இதனால, அக்கா, தம்பிக்கு இடையே அடிக்கடிச் சண்டை வரும். ஒரு கல்யாணத்தைச் செஞ்சு வச்சுட்டா பொறுப்பு வந்துடும். திருந்திடுவான்னு நினைச்சு அவனோட அக்காதான் கோவில்பட்டியில ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணத்தை நடத்தி வச்சா. ஆனா, கல்யாணம் ஆன பிறகும் பழையமாதிரியே வேலைக்குப் போகாம இருந்தான். வேலைக்குப் போகமா இருந்தா எப்படிக் காலத்தைக் கழிக்கிறது.

ஒழுங்கான வேலைக்குப் போங்கன்னு அந்தப் பொண்ணு அடிக்கடிச் சொல்லும். ஆனா, அவன் கோபப்படுவான். வேலைக்குப் போகுறது சம்பந்தமானப் பிரச்னையில் ரெண்டு பேருக்கும் சின்னச் சின்ன சண்டை வரும். அவனோட அக்காதான் தீர்த்து வைப்பா. ஆனா, வேலைக்குப் போகச் சொன்னதுக்காகப் பொண்டாட்டியையே கொலை செய்யுற அளவுக்குப் போவான்னு யாரும் நினைக்கலை. கல்யாணமாகி 5 மாசம்கூட ஆகலை. கர்ப்பமான  பொண்ணைக் குத்திக் கொல்ல எப்படித்தான் மனசு வந்துச்சோ” என வேதனையுடன் உறவினர்கள். இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan