Published:Updated:

`பஞ்சாயத்து பேசியும் தீராத சோகம்' - விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்!

மலையரசு
`பஞ்சாயத்து பேசியும் தீராத சோகம்' - விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்!
`பஞ்சாயத்து பேசியும் தீராத சோகம்' - விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்!

விருந்துக்கு வந்த மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`பஞ்சாயத்து பேசியும் தீராத சோகம்' - விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்!

உத்தரகாண்ட் மாநிலம் சுல்தான்பூர்பட்டியைச் சேர்ந்தவர் ரயீஸ் அகமது. இவர் தன் மகள் ருஹ்ஷரை அதே பகுதியில் உள்ள இக்ரம் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் செய்துகொடுத்தார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் வரதட்சணை தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. இக்ரமின் சகோதரிகள் வரதட்சணை தொடர்பாக தொடர்ந்து பிரச்னை எழுப்பத் தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகமாகவே ருஹ்ஷர் இதுகுறித்து தன் தந்தையிடம் புகார் தெரிவித்துள்ளார். இதன்பின் மணப்பெண்ணின் தந்தை ரயீஸ் அகமது கிராம பஞ்சாயத்தைக் கூட்டி பிரச்னைக்கு முடிவு கட்டியுள்ளார். பஞ்சாயத்தில் இருவரையும் தனிக் குடித்தனம் வைக்க முடிவெடுத்து அதன்படி இருவரும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர். 

`பஞ்சாயத்து பேசியும் தீராத சோகம்' - விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்!

தனிக்குடித்தனம் சென்ற பிறகு நேற்று தன் மாமனார் குடும்பத்தை விருந்துக்கு அழைத்துள்ளார் இக்ரம். அதன்படி நேற்று குடும்பத்துடன் விருந்துக்கு வந்துள்ளார் ரயீஸ். வந்த இடத்தில் மீண்டும் வரதட்சணை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மாமனாரும் மருமகனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் டென்ஷனான இக்ரம் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாமனார் ரயீஸை சுட்டுள்ளார். சுட்டது மட்டுமல்லாமல் போலீஸுக்கு போன் செய்து மாமனாரைச் சுட்ட தகவலையும் சொல்லியுள்ளார். 20 நிமிடம் கழித்து வந்த போலீஸ் அவரைக் கைது செய்து கஸ்டடியில் வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Vikatan