Published:Updated:

ஸ்கெட்ச் போட்டு கோட்டைவிட்ட போலீஸ்... எஸ்கேப் ஆன கும்பல்... இரவில் கடத்தப்பட்ட திருநங்கைகள்

JAYAVEL B
ஸ்கெட்ச் போட்டு கோட்டைவிட்ட போலீஸ்... எஸ்கேப் ஆன கும்பல்... இரவில் கடத்தப்பட்ட திருநங்கைகள்
ஸ்கெட்ச் போட்டு கோட்டைவிட்ட போலீஸ்... எஸ்கேப் ஆன கும்பல்... இரவில் கடத்தப்பட்ட திருநங்கைகள்

காஞ்சிபுரம் பகுதியில், நேற்றிரவு 6 திருநங்கைகள் கத்தி முனையில் சக திருநங்கைகளாலேயே காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்கெட்ச் போட்டு கோட்டைவிட்ட போலீஸ்... எஸ்கேப் ஆன கும்பல்... இரவில் கடத்தப்பட்ட திருநங்கைகள்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே உள்ள கெழுத்திபேட்டை பகுதியில் மகாலட்சுமி என்ற திருநங்கை வசித்துவருகிறார். இவர், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள திருநங்கைகளைக் கொத்தடிமைகளாக வைத்து வியாபாரம் செய்துவந்துள்ளார். மகாலட்சுமியின் கொடுமை தாங்க முடியாமல், அவரிடமிருந்து 6 திருநங்கைகள் தப்பித்து வெளியேறினர். பிறகு அவர்கள், காஞ்சிபுரம் குருவி மலைப்பகுதியில் இருக்கக்கூடிய திருநங்கை நகரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தகவல் அறிந்து குருவிமலைக்கு வந்த மகாலட்சுமி, அந்த 6 திருநங்கைகளிடமும் தலா 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் உங்களை விடுவிப்பேன் என்று கூறி மிரட்டியுள்ளார். மகாலட்சுமி பணம் கேட்டு தொடர்ச்சியாக மிரட்டிவந்த காரணத்தால், அந்த 6 திருநங்கைகளும் காஞ்சிபுரம் துணை கண்காணிப்பாளரிடம் மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம் துணை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், திருநங்கை நகரை ஆய்வுசெய்த பிறகு கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டார். அதன்படி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.


இந்தச் சூழலில், இரவு நேரத்தில் மூன்று கார்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குருவி மலைப்பகுதியில் இருக்கும் திருநங்கை நகருக்கு கையில் கத்தியுடன் சென்றனர். இவர்களைப் பார்த்ததும் பயந்துபோன ஆறு திருநங்கைகளும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் பதுங்கினர். கத்தியுடன் வீட்டின் உள்ளே நுழைந்த திருநங்கைகள், வீட்டை அடித்து நொறுக்கியதோடு, அந்த ஆறு திருநங்கைகள் மற்றும் அடைக்கலம் கொடுத்த புவனா என்ற திருநங்கை என ஏழு பேரையும் காரில் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களைப் பின் தொடர்ந்து காவல்துறையினரின் வாகனமும் சென்றது. அதில் ஒரு திருநங்கை, காரில் இருந்து குதித்துத் தப்பித்தார். ஆனால், மூன்று கார்களும் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்துவிட்டன.  இவர்களை காஞ்சிபுரம் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். 

இதனிடையே, திருநங்கைகளை கத்திமுனையில் கும்பல் கடத்திய வழக்கில் 3 கார்கள், 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 4 டிரைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Vikatan