Published:Updated:

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை?

எடியூரப்பா

எடியூரப்பாவின் பேத்தி செளந்தர்யா கர்நாடகாவில் தற்கொலை!

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை?

எடியூரப்பாவின் பேத்தி செளந்தர்யா கர்நாடகாவில் தற்கொலை!

Published:Updated:
எடியூரப்பா

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மா. இவரின் மகள் சௌந்தர்யா (30) பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2019 - ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றி வந்த நீரஜ் எனும் சக மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார் செளந்தர்யா. இந்த தம்பதிக்கு 6 மாத கைக் குழந்தையும் உள்ளது. மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த சௌந்தர்யா, அங்கு தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

உடனடியாக அவரது உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவர் இறந்துவிட்டார் என உறுதிப்படுத்தப்பட்டது. குழந்தை பிறந்ததற்குப் பின்பு அவர் மன அழுத்தத்தில் இருந்தார் என்றும், அதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கூறப்படுகிறது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
கோப்புப்படம்

இது தற்கொலைதானா? தற்கொலைக்கான காரணம் என்ன? போன்ற கோணங்களில் கர்நாடக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த செய்தியை அறிந்ததும் கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு விரைந்து எடியூரப்பாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.