Published:Updated:

`பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மெத்தை' - பாலியல் வழக்கில் யோகா மாஸ்டர் யோகராஜ் சிக்கியது எப்படி?

மறுநாள் யோகராஜ், என்னைத் தொடர்பு கொண்டு நாம் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டோம். நம்மை யாரும் பிரிக்க முடியாது என்று கூறினார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 1-ம் தேதி பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது ``எனக்கு 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் யோகராஜ் என்கிற பூவேந்திரன் சிதம்பரம் என்பவர் அறிமுகமாகினார். அவர் யோகா கற்றுக் கொடுக்கும் ஆசிரியர். நான் மருத்துவத்துறையில் பணிபுரிந்து வருவதால் யோகா கற்றுக்கொள்ள 14.2.2021-ம் தேதி அவருடைய வகுப்பில் சேர்ந்தேன். அவர்,வாட்ஸ்அப் மூலம் எனக்கு ஆன்மிக மெசேஜ்களை அனுப்பினார். பிறகு என்னைக் காதலிப்பது போன்ற மெசேஜ்களை அனுப்பினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். பிறகு இரட்டை அர்த்த வாரத்தைகளைப் பயன்படுத்தி என்னிடம் பேசினார். அதை அவர் ஆன்மிக ஞானம் என்று கூறினார். பிறகு என்னுடன் சேர்ந்து அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதை நம்முடைய வருங்கால ஞாபக அர்த்தங்கள் என்று கூறுவார்.

யோகா மாஸ்டர் யோகராஜ்
யோகா மாஸ்டர் யோகராஜ்

கடந்த 28.4.2021-ம் தேதி யோகராஜ், தனக்கு பிறந்த நாள் என்று கூறி என்னை அவரின் வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவர் தன்னுடைய அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு மெத்தையில் பூக்கள் போடப்பட்டிருந்தது. ஏன் என்று அவரிடம் நான் கேட்டதற்கு இன்ப அதிர்ச்சி உள்ளது என்று கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் வெளியில் சென்றபோது நானும் புறப்படுகிறேன் என்று கூறினேன். அந்த சமயத்தில் எனக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்தார். அதை நான் குடித்தவுடன் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் மயங்கிய நிலையில் இருந்தபோது என்னை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதை வீடியோவாகவும் எடுத்து வைத்திருப்பதாகக் யோகராஜ் என்னிடம் கூறினார்.

மறுநாள் யோகராஜ், என்னைத் தொடர்பு கொண்டு நாம் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டோம். நம்மை யாரும் பிரிக்க முடியாது என்று கூறினார். மேலும் நாம் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் வீடியோ ஆதாரம் உள்ளதாக என்னிடம் தெரிவித்தார். இந்த வீடியோ ஆதாரத்தை வைத்துக்கொண்டு என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். அதோடு என்னிடமிருந்து பணமும் வாங்கினார். தற்போது திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார். திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டுகிறார். அவரின் செல்போனில் என்னைப் போல பல பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் உள்ளன. 29.9.2021-ம் தேதி என்னை மிரட்டிவருகிறார். எனவே யோகராஜ் என்கிற பூவேந்திரன் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட வீடியோவை அழித்து என் மானத்தை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்த காவலர்; சிறுமியின் தாய் உடந்தை; போக்சோவில் வழக்கு பதிவு
யோகா மாஸ்டர் யோகராஜ்
யோகா மாஸ்டர் யோகராஜ்

இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். இளம்பெண் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையிலும் புகாரின் அடிப்படையிலும் யோகா மாஸ்டர் யோகராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு