Published:Updated:

சென்னை: பூட்டப்படாத கதவு; தன்னார்வலர்போல நடித்து கொள்ளை - இளம்பெண் சிக்கியது எப்படி?

கொள்ளை - கோகிலா கைது

சென்னையில் பழைய துணி வாங்க வந்த இளம்பெண், வீட்டுக்குள் நுழைந்து 57 சரவன் தங்க நகைகள், பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை: பூட்டப்படாத கதவு; தன்னார்வலர்போல நடித்து கொள்ளை - இளம்பெண் சிக்கியது எப்படி?

சென்னையில் பழைய துணி வாங்க வந்த இளம்பெண், வீட்டுக்குள் நுழைந்து 57 சரவன் தங்க நகைகள், பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
கொள்ளை - கோகிலா கைது

சென்னை வில்லிவாக்கம், வடக்கு திருமலை நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பிரியா பிரசாத் (55). இவர் ஐசிஎஃப் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் அண்ணாநகரிலுள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறேன். என் கணவர் 2010-ம் ஆண்டு இறந்துவிட்டார். என் மூத்த மகன் ஷியாம் பிரசாத், கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிஎஃப்-ல் பணியாற்றிவருகிறார். இளைய மகன் அர்ஜுன் பிரசாத், படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான். கடந்த 23.4.2022-ம் தேதி காலை 8:30 மணியளவில் இளைய மகன் அர்ஜுன் பிரசாத் என்னைப் பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றான்.

கோகிலா
கோகிலா

பிறகு அவன் வெளியில் செல்லும்போது மறதியாக வீட்டைப் பூட்டாமல் சென்றுவிட்டான். பின்னர் மாலையில் நான் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 57 சவரன் தங்க நகைகள், 25,000 ரூபாய் ஆகியவற்றைக் காணவில்லை. வீட்டில் மற்ற பொருள்கள் திருட்டுப்போகவில்லை. எனவே திருட்டுப்போன நகைகள், பணத்தைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாமுண்டீஸ்வரி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, பெண் ஒருவர், பிரியா பிரசாத்தின் வீட்டிலிருந்து அவசரமாக வெளியில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் யார் என்று போலீஸார் விசாரித்தபோது அந்தப் பெண்ணின் பெயர் கோகிலா (31) என்றும், செங்குன்றம், முண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது நகை, பணத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடமிருந்து 20 சவரன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கோகிலாவிடம் நடத்திய விசாரணையில் மீதமுள்ள நகைகளை ஆட்டோ சரவணன் என்பவரிடம் கொடுத்ததாகத் தெரிவித்தார். அதனால் ஆட்டோ டிரைவர் சரவணனை போலீஸார் தேடிவருகின்றனர்.

கைது
கைது

இது குறித்து போலீஸார் கூறுகையில், `` கைதுசெய்யப்பட்ட கோகிலாவும், தலைமறைவாக உள்ள சரவணனும் ஆட்டோவில் வீடு வீடாகச் சென்று பழைய துணி, நன்கொடையைக் காப்பகங்களுக்கு வசூலிக்கும் தன்னார்வலர்களைப்போல செயல்பட்டு வந்துள்ளனர். அப்போது பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு இவர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். சம்பவத்தன்று பிரியா பிரசாத்தின் வீடு பூட்டாமல் இருப்பதை கோகிலா பார்த்துள்ளார். அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட அவர், கதவைத் திறந்து உள்ளே சென்றிருக்கிறார். பின்னர், நகை, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். விசாரணைக்குப் பிறகு கோகிலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். தன்னார்வலர்கள்போல வருபவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism