Published:Updated:

காஞ்சிபுரம்: காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்த போலீஸ் எஸ்.ஐ - நடந்தது என்ன?!

இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்த போலீஸ் எஸ்.ஐ

காஞ்சிபுரத்தில் டிக்டாக் பெண்ணின் கன்னத்தில் போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஒருவர் அறைந்த காட்சி சமூகவலைத் தளத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட எஸ்.எஸ்.ஐ, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம்: காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்த போலீஸ் எஸ்.ஐ - நடந்தது என்ன?!

காஞ்சிபுரத்தில் டிக்டாக் பெண்ணின் கன்னத்தில் போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஒருவர் அறைந்த காட்சி சமூகவலைத் தளத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட எஸ்.எஸ்.ஐ, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Published:Updated:
இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்த போலீஸ் எஸ்.ஐ

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவருக்கும் காஞ்சிபுரம் காவல்துறையில் தனிப்படை காவலராக இருந்த சோமு என்கின்ற சோமசுந்தரம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. தற்போது சோமசுந்தரம், பதவி உயர்வு பெற்று எஸ்.எஸ்.ஐ-யாக பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் நட்பாக இருந்த பிரியாவுக்கும் சோமசுந்தரத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் பிரியாவின் சகோதரர் வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதற்கு சோமசுந்தரம்தான் காரணம் என பிரியா கருதினார்.

பிரியாவை தாக்கும் போலீஸ் எஸ்.எஸ்.ஐ சோமசுந்தரம்
பிரியாவை தாக்கும் போலீஸ் எஸ்.எஸ்.ஐ சோமசுந்தரம்

பிரியாவுக்கும் , எஸ்.எஸ்.ஐ சோமசுந்தரத்துக்கும் இடையே உள்ள நட்பு குறித்த ரகசிய தகவல் போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக தனிப்படையிலிருந்து சோமசுந்தரம், உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல்நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் போலீஸ் எஸ்.எஸ்.ஐ சோமசுந்தரம் வேலைப்பார்க்கும் காவல் நிலையத்துக்கு பிரியா வந்தார். அங்கு பணியிலிருந்த சோமசுந்தரத்திடம் பிரியா தகராறில் ஈடுபட்டார். அதைப் பார்த்த சக காவலர்கள் இருவரையும் சமதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரியாவின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த சோமசுந்தரம் காவல்நிலைய வாசலிலேயே, வைத்து சககாவலர்கள் முன்னிலையில் பிரியாவின் கன்னத்தில் இரண்டு தடவை ஒங்கி அறைந்தார். அப்போது பிரியா கையில் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்தது. இதையடுத்து சோமசுந்தரத்தை அர்ச்சித்த பிரியா, என்னுடைய செல்போனை கொடுத்து விடு, இல்லையென்றால் இங்கேயே நிர்வாணமாக நிற்பேன் என்று மிரட்டல் விடுத்தார். அதைக் கேட்ட சக போலீஸார், பிரியாவை சமதானப்படுத்தி அவரின் செல்போனையும் கையில் கொடுத்தனுப்பினர்.

பிரியா
பிரியா

இதையடுத்து காவல் நிலையத்திலிருந்து பிரியா புறப்பட்டுச் சென்றார். பிரியாவை அழைத்து வந்த ஆட்டோ டிரைவரையும் போலீஸ் எஸ்.எஸ்.ஐ சோமசுந்தரம் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த காட்சிகள் அனைத்தையும் பிரியா தரப்பு ரகசியமாக வீடியோவாக எடுத்தது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதைப் பார்த்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சுதாகர், உடனடியாக எஸ்.எஸ்.ஐ சோமசுந்தரத்தை ஆயுதப்படைக்கு இடமாற்றி உத்தரவிட்டார். தொடர்ந்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்.பி சுதாகர் தெரிவித்தார்