Published:Updated:

விடிய விடிய போன் பேச்சு; அதிகாலையில் தற்கொலை... காதல் விவகாரத்தில் இளம்பெண் விபரீத முடிவு!

தற்கொலை

விடிய விடிய செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், அதிகாலையில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விடிய விடிய போன் பேச்சு; அதிகாலையில் தற்கொலை... காதல் விவகாரத்தில் இளம்பெண் விபரீத முடிவு!

விடிய விடிய செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், அதிகாலையில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Published:Updated:
தற்கொலை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, மோட்டூர், தொட்டிதுறையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பெட்டிக் கடை நடத்திவருகிறார். இவரின் மகள் நிஷா (21). இவர் டிப்ளோமா படித்துவிட்டு சென்னை அயனம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவந்தார். சென்னை, மதுரவாயல் லட்சுமி நகர், சிவந்தி ஆதித்தனார் தெருவில் வாடகைக்குக் குடியிருந்து வந்தார். இவரின் தோழி லோகேஷ்வரியும் அதே வீட்டில் தங்கியிருந்தார்.

வெங்கடேசன் கொடுத்த புகார்
வெங்கடேசன் கொடுத்த புகார்

இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி நிஷா தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர், வெங்கடேசனுக்கு போன்செய்து, `உங்கள் மகள் சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்’ என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்தார். நிஷாவின் தோழி லோகேஷ்வரியிடம் வெங்கடேசன் விசாரித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், ``என்னுடைய மகள், செல்போனில் அதிகாலை 3:21 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்வதை, தனக்குத் தானே படம் பிடித்திருக்கிறார். மேலும், அந்த செல்போனை ஆய்வுசெய்ததில் அவர் ஒருவரைக் காதலித்துவந்தது தெரியவருகிறது. காதல் பிரச்னையில்தான் நிஷா தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். எனவே என் மகள் நிஷாவின் இறப்பு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலை - மரணம்
தற்கொலை - மரணம்
சித்திரிப்புப் படம்

புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்கு பதிவுசெய்து, நிஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். நிஷாவின் தோழி லோகேஷ்வரியிடம் போலீஸார் விசாரித்தபோது, ``சம்பவத்தன்று இரவு நிஷா நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருந்தார். அதனால் நான் தூங்கச் சென்றுவிட்டேன். காலையில் கண்விழித்துப் பார்த்தபோதுதான் நிஷா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள். மற்றப்படி எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறியிருக்கிறார். நிஷாவின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அவரின் காதலனிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கின்றனர். அதன் பிறகே நிஷாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.